JKKN கல்வி நிறுவனத்தில் 'நிறுவனர் தின' விழா : கோலாகல கொண்டாட்டம்..!

JKKN கல்வி நிறுவனத்தில்  நிறுவனர் தின விழா : கோலாகல கொண்டாட்டம்..!
X

'நிறுவனர் தின' விழாவில் பேசிய கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

JKKN கல்வி நிறுவனங்களின் 'நிறுவனர் தின' விழா இந்த ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தின் "கொடை வள்ளல்" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் JKK நடராஜா ஐயா. அவர் உருவாக்கிய கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் இன்றளவும் குமாரபாளையம் பகுதி மக்களுக்கு பல வகைகளில் பயனளித்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் இவரது பிறந்தநாளை நிறுவனர் நாளாக JKKN கல்வி நிறுவனங்களின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வாண்டு நிறுவனர் தின விழா குமாரபாளையம் JKKN கல்வி நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவில் பேசிய இயக்குனர் ஓம் சரவணா


இந்த விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம்சரவணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஜமுனாராணி அனைவரையும் வரவேற்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிறுவன தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை பேசுகையில், அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 1952ம் ஆண்டு குமாரபாளையத்தில் துவக்கப்பள்ளியை ஐயா அவர்கள் ஆரம்பித்தார். பின்னர் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1965ம் ஆண்டு பெண்கள்மேல்நிலைப்பள்ளி, 1969-ம் ஆண்டில் நடராஜா மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியும், 1974-ல் கலை அறிவியல் கல்லூரியும் 1985-ல் பார்மஸி கல்லூரியும்,1987ம் ஆண்டில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மத்தியில் முதன்மையாக விளங்கும் வகையில் தனியார் மருத்துவக்கல்லூரியையும் தொடங்கினார்.

அதற்குப் பின்னர் 2006 ம் ஆண்டு செவிலியர் கல்லூரி, 2008 ம் ஆண்டு பொறியியல் கல்லூரி மற்றும் செந்தூர் ராஜா வாய் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தையும், 2009-ல் நடராஜா வித்யாலயா பள்ளி, 2016ம் ஆண்டில் கல்வியல் கல்லூரி என தொடங்கப்பட்டு கல்வி நிறுவனம் இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இன்று JKKN கல்வி நிறுவனங்கள் 70 ஆண்டு காலங்களை நிறைவு செய்து பல ஆயிக்கணக்கான மாணவ,மாணவிகளுக்கு கல்விச் சேவை வழங்கி இருப்பது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விஷயம் ஆகும்.' இவ்வாறு அவர் பேசினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிறுவன தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

இவ்விழாவினையொட்டி மாணவ,மாணவிகளுக்கு இடையே பல்வேறு கலை,கலாசார மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள்.

நிறைவாக JKKN பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். இளஞ்செழியன் நன்றி கூறினார். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.

JKK நடராஜா ஐயா அவர்கள் குமாரபாளையம் பகுதி மட்டுமல்லாமல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் அறியப்பட்டவராக விளங்கினார். இப்பகுதி மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்காலகட்டத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் வந்தால் JKK நடராஜா ஐயா அவர்களை சந்திக்காமல் செல்லமாட்டார்கள் என்கிற அளவுக்கு எல்லோரிடமும் மரியாதையாகவும், எல்லோரும் மதிப்பவராகவும் விளங்கினார்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்