experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களுக்கான அனுபவ பகிர்வு கூட்டம்
அனுபவ பகிர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவருடன் கல்லூரி பேராசிரியர்கள்.
experience sharing program -நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான அனுபவ பகிர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு B.ECE மாணவர் திரீஸ்வரன் வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் மாணவரும் (2008-2012) இந்நாள் கோயம்புத்தூர், திடொமோடிக்ஸ், லக்சுரி ஹோம் ஆட்டோமேஷன், புரோகிராமருமான பூபதிராஜா சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறையின் தலைவரும் மற்றும் உதவிப் பேராசிரியருமான ரம்யா முன்னாள் மாணவர் பூபதிராஜாவை கௌரவித்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் பூபதிராஜா, ஹோம் ஆட்டோமேஷன் துறையில் தனது அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள், அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இந்தத் தொழில் வழங்கும் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுடன் விரிவாக விவாதித்தார்.
இந்தத் துறையில் தொழிலைத் தொடர ஆர்வமுள்ள கல்ல்லூரியின் தற்போதைய மாணவர்களுக்கு அவர் மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார். கல்லூரி மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்பொழுதும் உங்களால் இயன்றதை முயற்சி செய்துகொண்டே இருங்கள். மேலும் நீங்கள் தோல்வியுற்ற போதிலும் தொடர்ந்து கடினமாக உழைத்து உங்களின் லட்சியத்தை அடையவேண்டும்.மேலும் கல்லூரிக்கும் உங்களுக்கும் இடையேயான உறவு நீங்கள் பட்டம் பெற்ற பிறகும் தொடரவேண்டும். நாங்கள் படித்த கல்லூரியில் எங்களை சிறப்பு அழைப்பாளராக கௌரவித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ECE உதவிபேராசிரியை சரண்யநிவாசினி, மற்றும் உதவிபேராசிரியர் நிர்மல் பிரிதிவ்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 50 மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அமர்வின் முடிவில் ECE இரண்டாம் ஆண்டு மாணவி பிரியங்கா நன்றியுரை ஆற்றினார்.
ஹோம் ஆட்டோமேஷன் துறையில் ஒரு தெளிவான கருத்துகளை உள்வாங்கிய மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில் தொடங்குவதற்கான உந்து சக்தியாக அமையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu