JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆற்றல் சேமிப்பு வார விழா

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆற்றல் சேமிப்பு வார விழா
X

ஆற்றல் சேமிப்பு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆற்றல் சேமிப்பு வார நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம்,JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஆற்றல் சேமிப்பு வார நிகழ்ச்சி டிசம்பர் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூர்ராஜா அரங்கில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை, JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம் சரவணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் கலைவாணி வரவேற்புரை ஆற்றினார்.

JKKN CET முதல்வர், முனைவர். ரூபன் தேவபிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை மாணவி ஆர்த்தி தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

JKKNCET முதல்வர் முனைவர். ரூபன் தேவபிரகாஷ், துணை முதல்வர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை விருந்தினருக்கு பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.

ஆற்றல் மேம்பாடு குறித்து விளக்கமளிக்கும் சிறப்பு விருந்தினர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட TNEB துணைப்பொறியாளர் (ஓய்வு) பிரகாசம், ஆற்றல் சேமிப்பின் அவசியம் மற்றும் அதற்கான வழிமுறைகள் மற்றும் யோசனைகளை வழங்கினார். ஆற்றல் சேமிப்பின் தேவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.

மின் ஆற்றல் சேமிப்புக்கான வழிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அவர் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் மாசுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும், பசுமை ஆற்றலின் தேவையையும் அவர் விளக்கினார்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, வினாடி வினா, குழுவிவாதம், ஃப்ளையர் தயாரித்தல் மற்றும் புதுமையான யோசனைகளை வழங்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் வாரம் முழுவதும் நடத்தப்பட்டன.

ஆற்றல் சேமிப்பு வாரவிழாவின் முடிவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்மருத்துவம், பொறியியல், நர்சிங், மருந்தகம், சுகாதார அறிவியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அனைத்து துறைகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவு நாள் அன்று மின்னணுவியல் மாற்று தகவல் தொழில்நுட்பதுறை தலைவர் ரம்யா, நன்றியுரை வழங்கினார். விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!