employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு

employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கு
X
employment training workshop-குமாரபாளையம், JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சிக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

employment training workshop -JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இங்கிலாந்தில் வேலை வாய்ப்பு பயிற்சி குறித்த கருத்தரங்கு வரும் 5ம் தேதி புதன்கிழமையன்று ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள செந்துர்ராஜா அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஜமுனாராணியின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியில், JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா வாழ்த்துரை வழங்க உள்ளார். தலைமை விருத்தினரான ஆஷ்டன் கேர் குரூப், யூகே நிறுவனத்தின் முதல்வர் கேதி ரகுநாதன் கலந்துகொள்கிறார்.


அவர் இந்நிகழ்ச்சியின் மையக்கருத்தான வேலைவாய்ப்பு பயிற்சி குறித்து உரை நிகழ்த்துகிறார். இக்கருத்தரங்கில் வேலை வாய்ப்புப் பயிற்சி என்றால் என்ன? மாணவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் அது ஏன் முக்கியமானது என்பது பற்றியும்,வேலை வாய்ப்புப் பயிற்சியின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் நல்ல வேலையில் சேருவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த அது எவ்வாறு உதவும் என்பது குறித்து தனது உரையாக வழங்குகிறார்.

மேலும் இங்கிலாந்தில் செவிலியர்களுக்கான வேலை வாய்ப்புகள், அதற்கான திறன் வளர்ப்பு, தனித்திறன்களாக மென்திறன் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி, நேர்முகத் தேர்வுத் தயாரிப்பு, ரெஸ்யூம் உருவாக்குதல் போன்ற பல்வேறு வகையான திறன்களை உள்ளடக்கி வேலைவாய்ப்புப் பயிற்சி பற்றி மாணவர்களுடன் விவாதிக்க உள்ளார்.

employment training workshop

கூடவே, நேர்காணலுக்கு எவ்வாறு தயாராவது? எவ்வாறு திறம்பட நெட்வொர்க் செய்வது மற்றும் அவர்களின் தகவல்தொடர்பு திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார். அதற்காக மாணவர்களுக்கு சில நடைமுறை உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை மாணவர்களுடன் பகிர உள்ளார்.கருத்தரங்கின் முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் கௌரி நன்றியுரை வழங்க உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!