Importance of Education in Tamil-கல்வியா..? அது என்னங்க..? படீங்க..தெரிஞ்சுக்கலாம்..!
Importance of Education in Tamil
Importance of Education in Tamil
கல்வியின் அவசியம் குறித்து மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இன்று சாதாரண மக்களுக்குக் கூட கல்வி குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. அதுதான் கல்வியின் மகத்துவம். கல்வி கற்றல் என்பது வேலைக்குப்போவதற்கு அல்ல. அறிவை வளர்த்துக்கொள்ள. அந்த அறிவுதான் எந்த வேலைக்குச் சென்றாலும் வழிகாட்டும் திசைகாட்டியாக இருக்கும். அறிவுக்கான அடிப்படை கல்வி.
"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோற்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு." என்பது ஔவையின் வாக்கு.
இதை விட சிறப்பாக கல்வியின் மேன்மையை யாரும் கூறிவிடமுடியாது.
கல்வியின் பயனை கற்றறிந்த அறிஞர்களிடமிருந்து அறிந்துகொள்வதுதான் சிறப்பு. எனவே, கல்வியைப் பற்றி அறிஞர்கள் கூறிய பொன்மொழிகளை இந்தக் கட்டுரை மூலமாகப் பார்க்கலாம்.
கற்றலைப் பற்றிய அழகான விஷயம் என்னவென்றால், அதை உங்களிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது.-பி.பி. கிங்
கல்வியே சிறந்த நண்பன். கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும்.-சாணக்யா
கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.-ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹ்யூகோ
ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. -டிசிடெரியஸ் எராஸ்மஸ்
கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். -லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன்
இந்த உலகைத் திறப்பதற்கான சாவி கல்வி. சுதந்திரத்திற்கான கடவுச்சீட்டு கல்வி. --ஓப்ரா வின்ஃப்ரே
கல்விக்கு முடிவே இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, முடிப்பதல்ல கல்வி. நீங்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை, முழு வாழ்க்கையும், ஒரு கற்றல் செயல்முறையே.-ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
ஒரு மனிதன் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைப்பதைக் கற்றுக்கொள்வது சாத்தியமற்றது. -எபிக்டெட்டஸ்
ஒருவர் பள்ளியில் படித்ததை மறந்த பிறகு எஞ்சியிருப்பதே கல்வி.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கல்வி என்பது இருளில் இருந்து ஒளியை நோக்கி நகர்வது. -ஆலன் ப்ளூம்
கல்வியே சுதந்திரத்தின் தங்கக் கதவைத் திறப்பதற்கான சாவியாகும். -ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
கல்வியானது படிக்கத்தெரிந்த, ஆனால் படிக்கத் தகுந்தவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாத ஒரு பரந்த மக்களை உருவாக்கியுள்ளது.-ஜி. எம். ட்ரெவெலியன்
படித்ததை பிரதிபலிக்காமல் படித்துக்கொண்டே இருப்பது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைப் போன்றது. -எட்மண்ட் பர்க்
கல்வியின் உயர்ந்த நோக்கம் அறிவு அல்ல செயல். -ஹெர்பர்ட் ஸ்பென்சர்
கல்வியின் நோக்கம் வெறுமையான மனதைத் திறந்த மனதாக மாற்றுவதாகும்.-மால்கம் ஃபோர்ப்ஸ்
எல்லாப் பதில்களையும் தெரிந்து கொள்வதை விட, சில கேள்விகளை தெரிந்து கொள்வது சிறந்தது.-ஜேம்ஸ் தர்பர்
கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால், அதன் பழங்கள் இனிப்பானவை.-அரிஸ்டாட்டில்
இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.-நெல்சன் மண்டேலா
தகவல் ஒரு அறிவு அல்ல. அறிவின் ஒரே மூலம் அனுபவம் மட்டுமே. ஞானத்தை அடைய உங்களுக்கு அனுபவம் தேவை.-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவை விட கற்பனை முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கல்வி என்பது ஒரு ஆயுதம். அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. -ஜோசப் ஸ்டாலின்
சிலர் கல்லூரிக்குச் செல்லாமலேயே கல்வி கற்கிறார்கள். மற்றவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பார்கள்.-மார்க் ட்வைன்
கற்றலை நிறுத்தும் எவரும், இருபது அல்லது எண்பது வயதினராக இருந்தாலும் வயதானவரே. கற்றலைத் தொடரும் எவரும் இளமையாகத்தான் இருப்பார்கள். வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயம் உங்கள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.-ஹென்றி ஃபோர்ட்
ஒரு மனிதனின் உண்மையான கல்வி அவன் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகே தொடங்குகிறது. உண்மையான கல்வி ஒழுக்கமான வாழ்க்கையின் மூலம் பெறப்படுகிறது.-ஹென்றி ஃபோர்ட்
உங்களுக்கானதை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யத் தயாராக இல்லாவிட்டால் ஜனநாயகம் வெற்றிபெறாது. எனவே ஜனநாயகத்தின் உண்மையான பாதுகாப்பு அரண், கல்வி மட்டுமே.-பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
கல்வி இல்லாத பகுத்தறிவு, பகுத்தறிவு இல்லாத கல்வியை விடச் சிறந்தது.-பெஞ்சமின் பிராங்க்ளின்
கற்றுக் கொண்டே இருக்கும் வரை உங்களால் இளமையாக இருக்க முடியும். -எமிலி டிக்கின்சன்
மக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் முன்னேற்றமடைய முடியாது.-நெல்சன் மண்டேலா
வாசித்தல் மற்றும் மேலும் மேலும் அதிக அறிவைப் பெறுதலை விட சிறந்தது எதுவும் இல்லை.-ஸ்டீபன் ஹாக்கிங்
கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை. -சே குவேரா
கல்வி இல்லாத மேதை சுரங்கத்தில் உள்ள வெள்ளி போன்றவர். -பெஞ்சமின் பிராங்க்ளின்
அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும். -ஜேம்ஸ் மேடிசன்
எனது மாணவர்களுக்கு நான் ஒருபோதும் கற்பிப்பதில்லை, அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்த மட்டுமே முயற்சிக்கிறேன்.- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu