Easy Thirukkural for Kids-குட்டீஸ்கள் ஈஸியா நினைவில் வைத்திருக்கும் குறட்பாக்கள்..!

Easy Thirukkural for Kids-குட்டீஸ்கள் ஈஸியா நினைவில் வைத்திருக்கும் குறட்பாக்கள்..!
X

easy thirukkural for kids-வள்ளுவன் படைத்த திருக்குறள் (கோப்பு படம்)

கவிச்சுவையும், அறக்கருத்துகளையம் கொண்ட ஈரடி வெண்பா நூலான திருக்குறள் அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய ஒரு சிறந்த நூலாகும்.

Easy Thirukkural for Kids

உலக பொதுமறை நூலாக அனைவராலும் போற்றப்படும் திருக்குறளில் 10 எளிமையான திருக்குறளைப் பற்றி இங்கு பார்க்கலாம். திருக்குறளில் மிகமிக முக்கியமான மற்றும் அதில் எளிமையான குறள்களே ஆகும்.

ஒரு மனிதனை முழுமை படுத்துவதற்கு திருக்குறளில் 1330 குறள்களும் போதுமானவை தான். ஆனால் அதிலும் மிக முக்கியமானதாகவும் எளிய முறையில் படிப்பதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Easy Thirukkural for Kids

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

பொருள் விளக்கம்

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

பொருள் விளக்கம்

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

Easy Thirukkural for Kids

3. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

பொருள் விளக்கம்

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

4. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள் விளக்கம்

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

5. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

பொருள் விளக்கம்

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

Easy Thirukkural for Kids

6. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்.

பொருள் விளக்கம்

இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

7. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

பொருள் விளக்கம்

கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

8. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள் விளக்கம்

எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

Easy Thirukkural for Kids

9. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள் விளக்கம்

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

10. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

பொருள் விளக்கம்

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil