Easy Thirukkural-எளிய திருக்குறள் பொருள் விளக்கத்துடன்..!
எளிமையான திருக்குறள்
Easy Thirukkural
இந்த உலகில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை ஒழுக்கத்துடனும் நல்வழியிலும் நடக்க வேண்டும் என்பதை இந்த 1330 குறள்கள் மூலம் இந்த உலகத்திற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
Easy Thirukkural
திருவள்ளுவர் பிறப்பு:
1330 குறள்களில் மனிதர் வாழ்க்கையை எடுத்துரைத்த திருவள்ளுவர் தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ள “மயிலாப்பூர்” என்ற பகுதியில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் இங்கு தான் பிறந்தார் என்பதற்கு இதுவரை எந்த சரியான ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள்:
• வள்ளுவர்
• தெய்வப்புலவர்
• பெருநாவலர்
• சென்னா போதர்
• பொய்யா மொழிப் புலவர்
• செந்நாப் போதர்
Easy Thirukkural
• நாயனார்
• பொய் மொழிப் புலவர்
• தேவர்
• முதற்பாவலர்
• மாதனுபங்கி
திருவள்ளுவர் வரலாறு:
சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆதி மற்றும் பகவான் ஆகிய இருவருக்கும் கிபி இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குள் மகனாகப் பிறந்தார். மேலும், இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உண்டு.
திருக்குறள் இதுவரை சுமார் 2000 வருடங்கள் பழமையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து தகவல்களும் எந்த ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை.
Easy Thirukkural
எளிமையான 10 திருக்குறள்
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள் விளக்கம் :
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
Easy Thirukkural
2. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
பொருள் விளக்கம் :
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
3. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள் விளக்கம் :
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
Easy Thirukkural
4. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பொருள் விளக்கம் :
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
5. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பொருள் விளக்கம் :
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
Easy Thirukkural
6. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
பொருள் விளக்கம் :
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
7. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பொருள் விளக்கம் :
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
Easy Thirukkural
8. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
பொருள் விளக்கம் :
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
9. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
பொருள் விளக்கம் :
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
Easy Thirukkural
10. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
பொருள் விளக்கம் :
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu