JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'கிரியேட்டிவ் ரைட்டிங்' விருந்தினர் விரிவுரை..!

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிரியேட்டிவ் ரைட்டிங் விருந்தினர் விரிவுரை..!
X

சிறப்பு விருந்தினர்  JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரம்யாவை கௌரவப்படுத்தும் ஆங்கிலத்துறை தலைவரும், உதவிப்பேராசிரியையுமான சசிகலா.

creative writing guest lecture-JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,ஆங்கிலத்துறை சார்பில் கிரியேட்டிவ் ரைட்டிங் விருந்தினர் விரிவுரை நடைபெற்றது.

creative writing guest lecture-குமாரபாளையம்,JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை (SF) சார்பில் கிரியேட்டிவ் ரைட்டிங் என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரைக் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆங்கிலத்துறை தலைவரும், உதவிப்பேராசிரியையுமான சசிகலா வரவேற்புரை ஆற்றினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவிகள்.

சிறப்பு விருந்தினராக JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரம்யா கலந்து கொண்டு 'கிரியேட்டிவ் ரைட்டிங்' குறித்து விருந்தினர் விரிவுரை வழங்கினார். அதில் அவர் ஆங்கில ஆர்வலர்கள் தங்களின் படைப்பு ஆற்றல் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த கிரியேட்டிவ் ரைட்டிங் எவ்வாறு உதவும் என்பது பற்றி விளக்கினார்.

விருந்தினர் உரை நிகழ்த்தும் சிறப்பு விருந்தினர்.

நிறைவாக 3ம் ஆண்டு BA ஆங்கிலத்துறை மாணவி மதுமிதா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் : ராசிபுரத்தில் திடீர் பனிமூட்டம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!