JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரியில் நாளை CPR பயிற்சி
சிபிஆர் பயிற்சி
JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கான CPR பயிற்சி நடக்கவுள்ளது. இந்த பயிற்சி நாளை (24ம் தேதி வெள்ளிக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சி JKKN ஸ்ரீ சக்திமயில் நர்சிங் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி வரவேற்புரையுடன் தொடங்க உள்ளது. இந்த CPR பயிற்சி நிகழ்வுக்கு தலைமை விருந்தினராக ஆர்த்தோ லைப் மருத்துவமனை மருத்துவர் பிரகாஷ்,M.S.(ORTHO) , CPR செயல்முறையின் முக்கியத்துவத்தினை பற்றியும், செய்முறை பாடத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்.
CPR என்பது இதயம் மற்றும் நுரையீரலின் சீரான செயல்பாட்டைக் குறிக்கிறது. இது ஒருவரின் சுவாசம் அல்லது இதயத் துடிப்பு நின்றுவிட்டால் அதற்காக செய்யப்படும் அவசரகால உயிர்காக்கும் செயல்முறையாகும். மின்சாரம் தாக்கி அதிர்ச்சியாகுதல், மாரடைப்பு ஏற்படுதல் அல்லது நீரில் மூழ்குதல் போன்ற மருத்துவ அவசரநிலைக்குப் பிறகு இது நிகழலாம். இவ்வாறான சூழலில் ஒருவரின் உயிரைக்காப்பாற்றுவதற்கு செய்யப்படவேண்டிய அவசரகால முதலுதவிக்குறித்த பயிற்சியை CPR என்ற தலைப்பின் கீழ் நாளை மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu