JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துகளை வழங்கும் சிறப்பு விருந்தினர்,டாக்டர். செல்வகுமார்
மாணவர்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஜீவன் அறக்கட்டளை நிறுவனரும் சமூக ஆர்வலருமான டாக்டர். செல்வகுமார் கலந்து கொண்டார்.
செந்தூர்ராஜா அரங்கத்தில் மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாம் ஆண்டு யுஜி மாணவர்களின் பிரார்த்தனை பாடலுடன் இந்த அமர்வு தொடங்கியது. பொறுப்பு முதல்வர் முனைவர்.மாலதி வரவேற்றுப் பேசினார்.
அவர் பேசும்போது நிகழ்ச்சிக்கான நோக்கங்களை அவர் எடுத்துரைத்தார். மேலும் 2023ம் ஆண்டின் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள் "சுத்தமான ஆற்றல் மாற்றங்களின் மூலம் நுகர்வோரை மேம்படுத்துதல்" என்று கூறினார்.
ஒரு பொருளை வாங்கும்போது அதன் தரம்,விலை மற்றும் தயாரிப்புத் தேதி போன்றவற்றை கவனித்து வாங்கவேண்டும். ஒரு நிறுவனம் ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும்விதமாகவே உற்பத்தி செய்ய வேண்டும். அந்த நிறுவனம் அதன் தயாரிப்பு பொருட்களின் உள்ளடக்கம், தயாரிப்பு தேதி, காலாவதி ஆகும் தேதி, விலை போன்ற விபரங்களை தயாரிப்பின் அட்டையில் குறிப்பிடவேண்டும். அதில் குறைகள் ஏற்படின் அந்த குறைகளை நுகர்வோர் முறையிடலாம்.
பல பொருட்களில் உடல் நலனுக்கு ஏற்படும் கலப்பட பொருட்கள் சர்க்கப்படுவதால் பல நோய்கள் உடலை தாக்குகின்றன. இவ்வாறு நுகர்வோருக்கு எதிரான குற்றமாக கருதி அந்த உற்பத்திப் பொருளையே தடை செய்வதற்கும் சட்டத்தில் இடமுண்டு.
நுகர்வோரின் நலன் கருதியே நுகர்வோருக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்கும் வகையில் நுகர்வோர் விசாரணை நீதி மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக எத்தனையோ நுகர்வோருக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து, அவர்களுக்கான உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒரு பொருளை வாங்கவும் நுகர்வோரின் உரிமைகள் என்ன என்பதை அறியவைப்பதற்காகவே மாணவர்கள் மத்தியில் இதைப்போன்ற நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சி மூலமாக ஜீவன் அறக்கட்டளை நிறுவனரும் சமூக ஆர்வலருமான டாக்டர். செல்வகுமார் மாணவர்களுக்கு நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விரிவான விளக்கங்களை அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu