JKKN கலை,அறிவியல் கல்லூரி வணிகவியல் அசோசியேசன் துவக்க விழா

JKKN கலை,அறிவியல் கல்லூரி  வணிகவியல் அசோசியேசன் துவக்க விழா
X
குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரி வணிகவியல் அசோசியேசன் துவக்க விழா நடைபெற்றது.

குமாரபாளையம் JKKN கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் அசோசியேஷன் துவக்க விழா கல்லூரி கருத்தரங்கு ஹாலில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினரை வரவேற்கும் மாணவிகள்.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் புல முதன்மையர் டாக்டர். வி. ஆர். பரமேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேட்டூர் அரசு கலை,அறிவியல் கல்லூரியை சேர்ந்த உதவி பேராசிரியர் டாக்டர். எம்.சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு"Decision making and study,"என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் பங்கேற்ற மாணவர்கள்.

அவரது சிறப்புரையில் மாணவர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் வாழ்க்கை சார்ந்த முடிவுகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை மாணவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் வகையில் வழங்கினார்.

முன்னதாக இளங்கலை 2-ம் ஆண்டு B.Com., மாணவி லோகப்ரியா வரவேற்புரை ஆற்றினார். 3ம் ஆண்டு B.Com., மாணவி பவித்ரா அறிக்கை வாசித்தார்.

விழாவில் பங்கேற்ற மாணவிகள்.

3-ம் ஆண்டு B.Com., மாணவி சரண்யா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவர், உதவி பேராசிரியை எம். எஸ். புனிதமலர் ஆகியோர் செய்திருந்தனர். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!