JKKN மருந்தியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ : 33 பேருக்கு உடனடி வேலை

JKKN மருந்தியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ : 33 பேருக்கு உடனடி வேலை
X

கல்லூரி மாணவரிடம் நேர்முகத்தேர்வு நடத்தும் அப்பல்லோ மருந்தக அதிகாரி.

JKKN மருந்தியல் கல்லூரியும், மதுரை அப்பல்லோ மருந்தகமும் இணைந்து, நடத்திய மாணவர்களுக்கான வளாகத்தேர்வு JKKN மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் JKKN மருந்தியல் கல்லூரியும், மதுரை அப்பல்லோ மருந்தகமும் இணைந்து இறுதியாண்டு பி.பார்ம் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை, (Campus Interview)நேற்று (மார்ச் 15ஆம் தேதி) கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

கல்லூரி வளாகத்தில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட மாணவ,மாணவிகள்.

இந்த வளாகத் தேர்வில் நேர் காணல் மூலமாக மாணவ, மாணவிகளின் திறன்கள் அறியப்பட்டது. இந்த வளாகத்தேர்வில் இறுதியாண்டு பி.பார்ம் பயிலும் 36 மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுக்களாக நடைபெற்ற வளாகத்தேர்வில் 33 மாணவ,மாணவியர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் ரா. சம்பத்குமார் தலைமை வகித்து அனைவருக்கும் அனைவருக்கும் வேலை கிடைப்பதற்கு வாழ்த்து கூறினார். தேர்வுக்கு பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, இயக்குனர் ஓம்சரவணா மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!