JKKN கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ: 54 பேருக்கு வேலை

JKKN கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ: 54 பேருக்கு வேலை
X

"ஃபின்கவர்" (Fincover) நிறுவனம் சார்பில் நடைபெற்ற வளாகத்தேர்வு.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ -ல் 54 மாணவ, மாணவிகள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு "ஃபின்கவர்" (Fincover) நிறுவனத்தின் வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) 5ம் தேதி நடைபெற்றது. இந் நிறுவனத்தின் மேலாளர் சுராஜ், மனித வளத்துறைய இயக்குனர் ராம்குமார் மற்றும் அந்நிறுவன குழு உறுப்பினர்கள் வளாக நேர்காணல் நடத்தினார்கள்.

வளாகத்தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்.

நேர் காணலில் சுமார் 200 மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் 54 பேர் 'தொழில் மேம்பாட்டு அலுவலர்' பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆண்டு வருமானம் 2.4லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர், தேர்வு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னதாக,கல்லூரியின் இயக்குனர் ஒம்சரவணா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து நேர்காணலை தொடங்கி வைத்தார். கல்லூரியின் புலமுதன்மையர் (டீன்) முனைவர்.பரமேஸ்வரி மற்றும் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

வளாகத்தேர்வில் கலந்துகொள்ள பெயர் பதிவுசெய்த மாணவர்கள்.

உதவிப் பேராசிரியர், கணினி அறிவியல் துறை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் பாலாஜி, ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். இந்த வளாகத் தேர்விற்கான ஏற்பாட்டினை வேலை வாய்ப்புத்துறை ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் செய்திருந்தார். கல்லூரி நிர்வாகம் சார்பில் "ஃபின்கவர்" (Fincover) நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!