JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்
X
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை, முதுநிலை மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நாளை கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்ல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்கு ஃபின்கவர் (FINCOVER) நிறுவனத்தின் கல்லூரி வளாக வேலைவாய்ப்புத் தேர்வு நடைபெற உள்ளது.

கல்லூரியில் படிக்கும்போதே திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விதமாக JKKN கல்வி நிறுவனங்கள், பல பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுடன் நட்புறவு கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவ,மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. ஃபின்கவர் (FINCOVER) என்ற நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்க மாணவ,மாணவிகளை தேர்வு செய்யவுள்ளது.

முகாம் நடைபெறும் நாள்: நாளை (05ம் தேதி) செவ்வாய்க்கிழமை

நடைபெறும் இடம்: செந்தூர்ராஜா ஹால் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!