JKKN கலை, அறிவியல் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்புத்துறையின் சிறப்பு பயிற்சிப்பட்டறை
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு அழைப்பாளர் Trainer மனோஜ்.
Department Of Fashion Design -நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில் துறை சார்ந்த மாணவர்களுக்கு கணினி மூலமாக காகிதமாதிரி உருவாக்குதல்( CAD in Pattern Making) பற்றிய 2 நாள் சிறப்பு பயிற்சிப்பட்டறை வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பின் துவக்க விழாவில் துகிலியல் துறைத்தலைவர் அன்புசரவணன் வரவேற்பு உரையாற்றி பயிற்சிப்பட்டறையின் பற்றிய முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கூறினார்.
இந்நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் pentans academy CAD Trainer மனோஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கணினி மூலமாக எவ்வாறு காகித மாதிரி உருவாக்குவது, அவற்றை வடிவமைப்பது பற்றி மிகவும் நுணுக்கமான முறையில் பயிற்சி அளித்தார்.
இந்த வகுப்பில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்று காகித மாதிரிகளை நேர்த்தியான முறையில் தயார் செய்து சமர்ப்பித்தார்கள். பயிற்சியின் முடிவில் pentans academy சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறான பயிற்சி பட்டறைகள் மாணவர்களின் பாடத்திட்டங்களுக்கு செயல்முறை விளக்கங்களாக அமையும். குறிப்பாக மாணவர்களின் கல்வி தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருவதால் பொதுவாக கணினி வாயிலாக பயிற்சி அளிப்பது அவசியமாக உள்ளது.
அதனால், ஆடை வடிமைப்பு மற்றும் பேஷன் டிசைனிங் போன்றவைகளை மாணவர்கள் கணினி வாயிலாக கற்றுக்கொள்வது புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். மேலும் புதிய புதிய டிசைன்களை உருவாக்குவதற்கு மாணவர்களின் கற்பனைத்திறனும் கைகொடுக்கவேண்டும். என்னதான் ஆடை வடிமைப்பில் பட்டங்கள் பெற்றாலும் கூட மாணவர்களின் தனிப்பட்ட கற்பனைத்திறன் அவர்களை சிறந்த டிசைனர்களாக உருவாக்கும். அப்படி உருவாகும் டிசைனர்களே பிற்காலத்தில் பேர் சொல்லும்படியாக புகழ்பெறுவார்கள்.
தென் இந்தியாவின் சிறந்த டிசைனர்
தென் இந்தியாவில் புகழ்பெற்ற பேஷன் டிசைனர் ஷில்பா ரெட்டி. அவர் பாரம்பரிய மற்றும் சமகால பட்டு டிசைனில் சிறந்து விளங்குகிறார். அவரது டிசைனிங் உயர்ந்த தரம் மற்றும் சிறந்த வடிவமைப்புகளில் தனித்தன்மை பெறுகிறது.
இந்தியாவின் சிறந்த டிசைனர்
இந்தியாவிலேயே புகழ்பெற்ற டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தலை சிறந்த வடிவமைப்பாளர். இந்தியாவில் அவருக்கென 10 கடைகளும், வெளிநாட்டில் 1 கடையும் உள்ளன.
இந்தியாவின் சிறந்த பெண் ஆடை வடிவமைப்பாளர்களில் 10 ஃபேஷன் டிசைனர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. ரிது குமார்
2. தருண் தஹிலியானி
3. ரோஹித் பால்
4. நீதா லுல்லா
5. மசாபா குப்தா
6. அனிதா டோக்ரே. ...
7. அனாமிகா கண்ணா - இவர் பாரிஸ் பேஷன் வீக்கில் தனது தயாரிப்புகளை காட்சிப்படுத்திய முதல் இந்திய பெண்மணி ஆவார்.
8. அபு ஜானி
9. சந்தீப் கோஸ்லா
இளம் ஆடை வடிவமைப்பாளர்
இந்தியாவின் இளைய ஆடை வடிவமைப்பாளர் அபேக்ஷா பினோஜ். அவருக்கு வயது வெறும் 10 மட்டுமே. அவர் சிறு வயதிலேயே ஆடை வடிவமைப்பாளராக ஆனார். இது ஆசியாவின் இளம் ஆடை வடிவமைப்பாளர் என்ற அடையாளத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu