B.Sc.,ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா படிங்க..! ஜோரான வேலை வாங்குங்க..!

B.Sc.,ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா படிங்க..! ஜோரான வேலை வாங்குங்க..!
X

ஆபரேஷன் தியேட்டர் (மாதிரி படம்)

மருத்துவத்துறையில் ஆபரேஷன் தியேட்டர், அனஸ்தீசியா என்பது இன்றியமையாத பிரிவுகளாகும். வேலைவாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

B.Sc., ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியாவில் பி.எஸ்சி., OTAT என்று அழைக்கப்படுகிறது. இது மூன்று ஆண்டு முழுநேர இளங்கலைப் படிப்பாகும். இந்த படிப்பில், மாணவர்கள் மேலாண்மை மற்றும் ஆபரேஷன் தியேட்டரில் எவ்வாறு செயல்படுவது என்பதைக் கற்றுக் கொள்கிறார்கள்.

மருத்துவத்துறை வளர்ச்சி :

கடந்த சில ஆண்டுகளாகவே மருத்துவ அறிவியல் வளர்ச்சி பெற்றதால் அதைச் சார்ந்த மருத்துவத்துறை மற்றும் மருத்துவமனைகள் மகத்தான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இதன் விளைவாக ஆபரேஷன் தியேட்டரில் பி.எஸ்சி., மற்றும் அனஸ்தீசியா தொழில் நுட்பவியலாளர்கள் உட்பட சுகாதார சேவை நிபுணர்களுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

தகுதி :

பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவில் படித்திருந்தாலும் கூட இந்த படிப்பில் சேரலாம்.

வேலை :

படிப்பை முடித்தவுடன் பின்வரும் வேலைகளைச் செய்ய தகுதி பெறுகிறார்கள்.

  • அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்களுக்கு உதவுதல்.
  • அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சை உபகரணங்களை தயார் செய்தல்.
  • உபகரணங்களை கிருமி நீக்கம் செய்தல்.
  • அறுவைசிகிச்சையின்போது அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வேலை செய்தல்.

எங்கு வாய்ப்புகள் ?

  • ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியாவில் பி.எஸ்சி., முடித்த பிறகு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியா வைத்திருக்கும் மருத்துவமனைகளுக்கு ஆபரேஷன் தியேட்டர் மற்றும் அனஸ்தீசியாவில் பி.எஸ்சி.,பட்டதாரிகளின் சேவை தேவைப்படும்.
  • ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் இந்தியாவில் உள்ளன. மேலும், பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் போன்ற மருத்துவப் பிரிவுகளிலும், ஆபரேஷன் தியேட்டர்களிலும் வேலையில் சேரலாம்.
  • ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்.
  • ஆசிரியர் அல்லது விரிவுரையாளர்.
  • லேப் டெக்னீசியன்.
  • மயக்கவியல் ஆலோசகர்.
  • இணை ஆலோசகர்.

-By

Dr.C. Dinesh Kumar MDS,

AHS Vice பிரின்சிபால்,

JKKN Dental College & Hospital

Kumarapalayam,Namakkal

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!