JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு அகில இந்திய அளவிலான அங்கீகாரம்..!
சிறந்த அங்கீகாரத்திற்கான விருதினை பெறும் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் சிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அசோசெம் புது டெல்லி, உயர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆகியவை இணைந்து நடத்திய 'டிஜிட்டல் ட்ரான்ஷ்பர்மேஷன்: தொழில்நுட்ப இணக்கம்' என்ற தலைப்பில் 'எஜூடெக் 100' என்ற உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது. அந்த உச்சி மாநாட்டில்,குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, இந்தியாவின் சிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்ற அசோசெம் எஜூடெக் 100 உச்சி மாநாடு-2022-இல் ஒரு விரிவான தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆகிய அளவுகோலின்படி கல்வி நிறுவனங்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தேர்வுக்குழு தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் 100 கல்விநிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அந்த 100 கல்வி நிறுவனங்களில் குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. மேலும், சிறந்த 20 நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதற்கு சிறப்பு சான்றிதழையும் பெற்றுள்ளது.
புது டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், வேந்தர்கள், துணைவேந்தர்கள், முதல்வர்கள், புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், எட்டெக் ஸ்டார்ட் அப்கள், மற்றும் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் எஸ்.ஓம்சரவணா கூறுகையில்,
"நாட்டின் 100 கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், முதல் 20 இடங்களுக்குள் அசோசெம் நமது கல்வி நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது. இது எங்கள் JKKN நிறுவனங்களில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குமான ஒரு பெரிய கௌரவமாகும். நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதையும், எங்கள் தொடர் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கிறது என்பதையே இந்த அங்கீகாரம் காட்டுகிறது.
கல்லூரிகளின் செயல்பாடு மற்றும் சேவைத் துறைகள் போன்ற அனைத்து துறைகளிலும் எங்கள் வளாகத்தில் டிஜிட்டல் மாற்றம் கொண்டுவருவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்வரும் ஆண்டில் எங்கள் அனைத்து கல்லூரிகளும், இதுபோல அங்கீகரிக்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu