JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகுக்கலை மற்றும் ஆரோக்ய சிறப்பு பயிற்சிப்பட்டறை

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகுக்கலை மற்றும் ஆரோக்ய சிறப்பு பயிற்சிப்பட்டறை
X

அழகுக்கலை பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகுக்கலை மற்றும் ஆரோக்யம் குறித்த சிறப்பு பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை சார்பாக 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு அழகுக்கலை ஆரோக்கியம் மற்றும் மணப்பெண் அலங்காரம்( Beauty care & Bridal Makeover) பற்றிய சிறப்பு பயிற்சிப்பட்டறை வகுப்பானது நடைபெற்றது.


இதற்கு துகிலியல் துறைத்தலைவர் அன்புசரவணன் வரவேற்பு உரையாற்றி பயிற்சிப்பட்டறை பற்றிய முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கூறினார்.

இந்நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அழகுக்கலை நிபுணர் கமலிப்பிரியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு அழகுக்கலை ஆரோக்யத்தை பற்றியும் மேலும் மணப்பெண் அலங்காரம் செய்வது எப்படி? அதற்கான வரைமுறைகள் என்னென்ன, முக தோற்றத்திற்கேற்ப எவ்வாறு அலங்காரம் செய்யவேண்டும் என்று மிகவும் சிறந்த செய்முறை பயிற்சியோடு உள்ளடங்கிய பல நுணுக்கங்களையும் கூறி பயிற்சி அளித்தார்.


இந்த வகுப்பில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சுயதொழில் தொடங்க விரும்புவோர் அழகுக்கலை பயிற்சியினை படிக்க ஏதுவாக மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) https://nsdcindia.org/ மற்றும் தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் – TAMIL NADU SKILL DEVELOPMENT CORPORATION https://www.tnskill.tn.gov.in/ ஆகியவை பயிற்சி அளிக்கின்றது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!