திறன் மேம்பாடு: கோவை நிறுவனத்துடன் அவினாசி அரசு கல்லூரி ஒப்பந்தம்

திறன் மேம்பாடு: கோவை நிறுவனத்துடன் அவினாசி அரசு கல்லூரி  ஒப்பந்தம்
X

 கோவை, நியூ டெக்னாலஜி நிறுவனத்துடன், அவினாசி அரசு கல்லூரி நிர்வாகம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்.

அவிநாசி அரசு கல்லூரியில், திறன் மேம்பாடு, சுயதொழில் முனைவோருக்கான வழிவகுத்தல் குறித்த முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தமிழக அரசு உயர்கல்வித்துறையில் பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. திறன் மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்காகவும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்காகவும், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கோவை, நியூ டெக்னாலஜி (New technology) நிறுவனமும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கல்லூரி முதல்வர் முனைவர்.ஜோ.நளதம், வேதியியல் துறைத்தலைவர் வே.ஹலிமாபீ (எ)ஷகிலா பானு, IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். பாலமுருகன், நாக் (நாசி) ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.தாரணி ஆகியோரது முன்னிலையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் "மொபைல் போன் பழுது நீக்குதல்'' பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதன் ஒருங்கிணைப்பாளரான இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் அ.பாலமுருகன் கூறுகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அவினாசி அரசு கல்லூரியின் அனைத்து மாணவர்களும் பயன்பெற்று, எதிர்வரும் காலத்தில் அரசு வேலையை மட்டும் எதிர்நோக்கி இல்லாமல், சுயதொழில் செய்து, மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கும் வகையில் இப்பயிற்சி அமையும் என்றார்.

அவினாசி தொகுதி செய்திகளை அறிந்து கொள்ள: https://www.watsapp.news/AN என்ற லிங்க் வாயிலாக இணையலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!