/* */

JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் புத்தாக்க கருத்தரங்கம்

குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “JKKN ASPIRE” என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் புத்தாக்க கருத்தரங்கம்
X

நிகழ்ச்சியில்  தலைமையுரை ஆற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா.

குமாரபாளையம் JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் "JKKN ASPIRE" என்ற கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள செந்தூர் ராஜா அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியின் துணை முதல்வர் ஈஸ்வர மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.


JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா தலைமை உரை ஆற்றினர். சிறப்பு விருந்தினராக JKKNகல்வி நிறுவன செயல் திறன் அதிகாரி பிரவின் தியாகராஜன் கலந்து கொண்டு மாணவர்களிடம் தனது வாழ்வில் எதிர்கொண்ட பிரச்னைகள் மற்றும் அவர் எடுத்துக்கொண்ட இலக்குகளை எடுத்துக்காட்டாக கூறி, மாணவர்கள் எவ்வாறு ஒரு இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும், அதை நோக்கி எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பது குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார்.


அதில் அவர் எவ்வாறு ஒரு இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும்? ஒவ்வொரு மனிதனும் தற்போது தான் இருக்கும் நிலையை விட உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அந்தக் கனவு நனவாவதற்கு ஒவ்வொரு மனிதனும் அந்த இலக்கை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். அதற்குக் கூட படிப்படியாய் முயற்சிக்க வேண்டுமே தவிர தடாலடியாக ஒரே நேரத்தில் இலக்கை நோக்கிய பயணத்தை அடைந்துவிட முடியாது. அப்படி முயற்சி செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.


மேலும் நம்முடைய முயற்சியை நம்மால் அளவீடு செய்ய முடியும். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் பொழுது அந்த இலக்கை அடைய முடியும். சில சமயம் அடைய முடியாத நிலை கூட ஏற்படலாம். இலக்கை அடைய முடியாமைக்கு செய்த தவறுகள் என்ன என்ற மதிப்பீடுகள் இன்னும் உங்களை உயர்த்தும். அப்போது இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் அல்லது அடுத்த முறை இன்னும் கூடுதலாக முயற்சி செய்து அந்த இலக்கை அடைய வேண்டும் என்று தோல்விகளை பாடங்களாக மாற்றிக்கொள்ள நினைப்பது ஒரு விதம். எப்போதும் உங்களது எண்ணங்கள் நேர்மறையாக இருக்க வேண்டுமே தவிர எதிமறை எண்ணங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசினார்.

இந்நிகழ்வில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சத்தியசீலன், செந்தில்,கலைவாணி, மோகன்குமார்,விமலா,கிருத்திகா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் நிறைவாக மேலாண்மை துறைத்தலைவர் பேராசிரியை விமலா நன்றி உரை ஆற்றினார்.

Updated On: 29 Aug 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...