அரண் என்பதின் பொருள் என்ன..? தெரிஞ்சிக்குவோம் வாங்க..!

Aran Meaning in Tamil
X

Aran Meaning in Tamil

Aran Meaning in Tamil-அரண் என்பது காப்பதின் அடையாளம். தடை எனும் ஆயுதம். எதிரிக்கு மறைதிரை.

Aran Meaning in Tamil

அரண் என்பது பகைவர்களிடமிருந்து நாட்டு மக்களைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் ஒன்று. அரண் வகைகளாக நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் போன்றவை கூறப்படுகின்றன.

படம் -நன்றி : தமிழ் விக்சனரி

நிலவரண்

ஒரு நாட்டிற்குள் பகைவர்கள் நுழையாத வண்ணம் நீரும், நிழலும் இல்லாத அதாவது மரங்களற்ற இடங்களில் கட்டப்படுவது நிலவரண் எனப்படுகிறது. இந்த வகை அரணில் மூன்று மதில்கள் இருக்கும். இவை புற மதில், இடை மதில் , அகமதில் என்று வகைப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன.

Aran Meaning in Tamil

ஒவ்வொரு மதிலின் வெளியேயும் ஆழமான அகழியும் இருக்கும். அதனை அடுத்து மிளை எனப்படும் காவற்காடும் இருக்கும். காவற்காட்டில் முள் மரமும், முட்செடி கொடிகளும் அடர்ந்திருக்கும். பகைவர்கள் காலில் தைப்பதற்காக நெருஞ்சி முள் போன்ற இரும்பு முட்கள் காவற்காட்டில் எங்கும் பரப்பப்பட்டு இருக்கும். தப்பி ஓடும் பகைவர்கள் காலில் மாட்டி இழுப்பதற்காக தோட்டி என்னும் இரும்புக் கொக்கிகள் காவற்காடு எங்கும் முளையடித்துக் கட்டப்பட்டு இருக்கும். மதிலின் மேற்புறத்தில் நான்கு மூலைகளிலும் தூண்கள் போல் மிக உயர்ந்த அகன்ற கட்டிடம் இருக்கும். இதற்கு கொத்தளம் என்று பெயர். இதன் மேல் இரவும், பகலும் காவலர்கள் கண்கானித்துக் கொண்டு இருப்பர். பகைவர் வருகையை இவர்களே கண்காணித்து அரசர்களுக்குச் சொல்லுவர்.

Aran Meaning in Tamil

நீர் அரண்

அரசர்கள் பாதுகாப்புக் கருதி கோட்டையை கடல் அல்லது பெரிய நீர்ப்பரப்புகளுக்கு அருகில் அமைத்து அதன் வெளிப்புறத்தை அகழிக்குப்பதில் கோட்டைச் சுற்றிலும் நீர் சூழச் செய்து காக்கும் அரண் வகை இதுவாகும். நீர்புகும் வழிக்கேற்ப நிலவரைகளையும், சுருங்கை வழிகளையும் ஏற்படுத்திக் கொள்வது நீர் அரண் எனப்படும்.

மலையரண்

மன்னர்கள் ,நிலவரண் அமைப்புகளுடன் அகழியும், காவற்காடும் இல்லாமல் செங்குத்தான மலைகளில் பாதுகாப்பிற்காக சுற்றுச் சுவரை ஏற்படுத்தி அரண் அமைத்து இருப்பர். இதுவே மலையரண் ஆகும்.

Aran Meaning in Tamil

படம் -நன்றி : தமிழ் விக்சனரி

காட்டரண்

நிலவரண் அமைப்புகளுடன் மனிதன் நுழைய இயலாதவாறு அடர்த்தியான காடுகளுக்கு நடுவே கோட்டைகளை அமைப்பது அல்லது கோட்டைகளைச் சுற்றி காடுகள் அமைப்பது காட்டரண் ஆகும்.

அரண் என்பதை பாதுகாப்பு எனலாம். அரண்மனை என்பது பாதுகாப்புமிக்க வீடு. மன்னர்கள் அல்லது அரசர்கள் மீது எதிரி நாட்டு மன்னர்கள் படை எடுத்து வரும்போது அவர்களை காக்கும் தடைகளே அரண் எனப்படுகிறது.

நயம்பட உரைத்தல்

இன்னும் அரண் என்பதை நயம்பட உரைத்தால் இப்படியும் கூறலாம். மண்ணுக்கு நீர் அரண், கண்ணுக்கு இமை அரண், மொழிக்கு இலக்கியங்கள் அரண், ஆணுக்கு பெண் அரண்; பெண்ணுக்கு ஆண் அரண், பகலுக்கு இரவு அரண், மழைக்கு மண் அரண்; மண்ணுக்கு நீர் அரண்..! சொல்லுக்கு நா அரண் இப்படி நயமாக எத்தனையோ கூறலாம். இனிமேல் நீங்களும் சிந்தித்து எழுதுங்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story