JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் TIME வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் TIME வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை
X

Aqua Regia The Science Quiz 2022-வினாடி  வினா போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவ,மாணவிகள்.

Aqua Regia The Science Quiz 2022-குமாரபாளையம், JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் TIME வினாடி-வினா நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளனர்.

Aqua Regia The Science Quiz 2022-JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரைப் பயின்று வரும் மாணவ,மாணவியர்களுக்கு "TIME" நிறுவனத்தின் சார்பாக "Aqua Regia The Science Quiz 2022" என்ற இரண்டாம் நிலை வினாடி வினா நிகிழ்ச்சியானது (6ம் தேதி) சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடைபெற்றது.

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.

இந்நிகழ்ச்சியில் 10 ஜோடி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது அறிவு சார்ந்த தனித்திறனை வெளிப்படுத்தினர். மேலும் "TIME" நிறுவனத்தின் சார்பில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சி மூலமாக JKKN மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்துவதில் சிறப்பு பெற்றமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!