JKKN மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் கோலாகலம்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர் ஒருவருக்கு பரிசு வழங்கும் சிறப்பு விருந்தினர் நகைச்சுவை பேச்சாளர் பழனி. அருகில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம் சரவணா ஆகியோர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN மெட்ரிக் பள்ளியின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டம் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு JKKN மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி. செந்தாமரை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ரம்யா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர், விஜய் டிவி நடிகர் பழனி கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு தனது நகைச்சுவை பேச்சின் மூலம் கதைகளைக் கூறி அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.
மேலும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் நாளை என்று எதையும் தள்ளிப் போடக்கூடாது. கிடைக்கிற வாய்ப்பைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கௌரவ விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவியும், ஈரோடு ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவர்.ஜெயஸ்ரீ முத்து கலந்து கொண்டு பள்ளி நாட்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தாளாளர் ஸ்ரீமதி.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா, சிறப்பு விருந்தினர் பழனி ஆகியோர் வழங்கினர்.
பின்னர், மாணவ,மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கல்வி நிறுவன கல்லூரிகளின் முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu