JKKN அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
KKN அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை பரிசு வழங்குகிறார். அருகில் சிறப்பு விருந்தினர் டாக்டர்.மணி.
allied health science first annual day function-குமாரபாளையம் JKKN அலைடுஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு விழாவையொட்டி, கடந்த ஒருவார காலமாக மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன. இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு விழாவிற்கு கல்வி நிறுவன தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர்.இளஞ்செழியன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் டாக்டர்.மணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது, 'தற்போது மருத்துவத்துறை பல்வேறு சமூக மாற்றங்களுக்கு இடையே பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே நவீன மருத்துவ உபகரணங்களையும்,புதிய தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வளர்ந்து வரும் மருத்துவத்துறையில் மாணவர்கள் அறிவுத்திறனை செயல்படுத்துவது மட்டுமல்லாமல் பலதுறை சார்ந்த நுணுக்கங்களையும் பெற்றிருப்பது எதிர்கால நலனுக்கு வழிவகை செய்யும்.' இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசுகளை வழங்கபட்டது. நிறைவாக முதல்வர் டாக்டர்.சசிகுமார் நன்றி கூறினார். மேலும் இந்த விழாவில் கல்லூரியின் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu