வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளை படிங்க

வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளை படிங்க
X

 ஆய்வகத்தில் மாணவர்கள்.

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகள் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் அட்ஷய பாத்திரம் போன்றது.

மருத்துவ தொழில் என்பது நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பது மட்டுமல்ல. மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர் ஆகணும். அல்லது குறைந்தபட்ஷம் நர்சிங் படித்திருக்க வேண்டும். ஆனால், மருத்துவத்துறையில் டாக்டர் ஆவதும், நர்ஸ் ஆவது மட்டுமே தொழில் அல்ல.

மருத்துவம் சார்ந்த தொழில் நுட்ப படிப்புகள் ஏராளமாக உள்ளன. காலத்திற்கேற்ப அறிவியல் வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் வருவதால், அந்த கண்டுபுடிப்புகளுக்கு ஏற்றவாறு புதிய பட்ட படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் ஏராளமாக உள்ளன.

மருத்துவம் சார்ந்த பட்ட படிப்பு முடித்தவுடன் அது சார்ந்த டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள், படிப்பின் தகுதியை உயர்த்துகிறது. அதன் மூலம் வேலைக்கான வாய்ப்புகளும் நமக்கு பாதை அமைத்து கொடுக்க வழிவகை செய்கிறது.

அந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகள் உள்ளன.

3+1 ஆண்டுகள் படிக்கும் B.Sc., பட்ட படிப்பு :

  • B.Sc. Cardiac Technology
  • B.Sc. Dialysis Technology
  • B.Sc. Physician Assistant
  • B.Sc. Respiratory Therapy
  • B.Sc. Critical Care Technology
  • B.Sc. Radiotherapy Technology
  • B.Sc. Radiography and Imaging Technology
  • B.Sc. Accident & Emergency Care Technology
  • B.Sc. Operation Theatre & Anaesthesia Technology

இப்படி மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகள் பெரிய மருத்துவமனைகளில் கூட இலகுவாக வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகுக்கும். அதனால், யோசிக்கவே வேண்டாம். பிளஸ் 2 -ல் அறிவியல் சார்ந்த பிரிவில் படித்தவர்கள் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளை படிக்கலாம்.

தமிழகத்தில் மருத்துவத்துறை மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமாக விரிந்து வளர்ந்துள்ளது. மருத்துவமனைகள் கார்ப்பொரேட் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. பல பெரிய மருத்துவமனைகளில் கூட இன்று தொழில்நுட்ப பணிகளுக்கு நல்ல பணியாளர்கள் கிடைக்காமல் தேடும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே,மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பது எளிதாகிறது. அதற்கான டிமாண்டும் உள்ளது.

பிறகென்ன? மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளை படிங்க. நல்ல வேலையை தேடிக்கங்க.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!