தவறுகளில் பாடம் கற்றுக்கொள்..! உயர்ந்த வாழ்க்கை அடைவாய்..! கலாம் பொன்மொழிகள்..!

தவறுகளில் பாடம் கற்றுக்கொள்..! உயர்ந்த  வாழ்க்கை அடைவாய்..! கலாம் பொன்மொழிகள்..!
X

abdul kalam quotes in tamil-முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த அப்துல் கலாம்.(கோப்பு படம்)

Abdul Kalam Golden Words in Tamil-கனவு என்பது கண்ணை மூடிக் காண்பதல்ல. அது வெறும் கனவாகிவிடும். விழித்திருக்கும் போது கனவு காணுங்கள். அது உங்களை தூங்கவிடாது. அது லட்சியக் கனவு என்றார்.

Abdul Kalam Golden Words in Tamil-இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல் வித்தகராக மட்டுமல்லாமல் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தம் அனுபவத்தில் பெற்ற வாழ்க்கைக்கு உதவும் பொன்மொழிகளை கூறியுள்ளார். அவர் கூறிய ஒவ்வொன்றும் நமக்கு நன்மையளிப்பதாக மற்றும் ஊக்கமளிப்பதாக இருக்கும். குறிப்பாக மாணவர்களுக்கு ''மாணவர்களே கனவு காணுங்கள்'' என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர். மாணவர்களின் அன்புக்கு உரியவராக விளங்கியவர். அவர் கூறியுள்ள அனுபவ வரிகளை உங்களுக்காக இங்கு தந்துள்ளோம்.

  • நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
  • ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே..!
  • ஒரு முறை வந்தால் அது கனவு..! இரு முறை வந்தால் அது ஆசை..! பல முறை வந்தால் அது லட்சியம்..!
  • உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே..! ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு..!
  • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை..!
  • அழகை பற்றி கனவு காணாதீர்கள்..! அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்..! கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையையே அழகாக்கிவிடும்..!
  • கனவு காணுங்கள்..! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு..!
  • கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்..! எண்ணங்களைச் செயல்களாக மாற்றுங்கள்..!
  • கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும்..! கண்ணைத் திறந்து பார், அதை வென்றுவிடலாம்..!
  • உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால், அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் தேடித் தரும்..!
  • ஒரு மனிதனின் அழகானது என்பது அவனது நிறமோ, பணமோ அல்ல..! அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் அழகு..!
  • நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்..! ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
  • அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை. சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும்..!
  • இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது..!
  • நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்..!
  • வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான், வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி..!
  • உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்..! எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்..! எனவே, நற்செயலே நன்மை தரும்..!
  • ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில், புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்..!
  • கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்..!
  • ஒரு மாணவரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது. மாணவர்கள் கேள்விகள் கேட்கட்டும்..!
  • குழந்தைகள் தனித்துவமாக இருக்க போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அவர்களை எல்லோரையும் போல் காட்ட எல்லா வழிகளிலும் முயற்சிக்கிறது.
  • வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில் தான் தொடங்கும் என்பதால் முதல் முயற்சியில் தோல்வியடைந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம்.
  • ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்திக்கு ஒளி கொடுப்பதால் அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை..!
  • நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு..!
  • வெல்வோம், சாதிப்போம், வேதனைகளை துடைத்தெறிவோம்..எந்தை அருளால் எதுவும் வசமாகும்...!
  • வாழ்க்கை என்பது, ஒரு சந்தர்ப்பம்- அதை நழுவ விடாதீர்கள், ஒரு கடமை - நிறைவேற்றுங்கள், ஒரு லட்சியம் - சாதியுங்கள், ஒரு சோகம் - தாங்கிக் கொள்ளுங்கள், ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள், ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்..!
  • வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை..! ஆனால், வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை..!abdul kalam quotes in tamil
  • சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன..!
  • நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்..!
  • உங்களால் உங்கள் எதிர்காலத்தை மாற்ற முடியாது. ஆனால் உங்களால் உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியும். மேலும் உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும்..!
  • நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும், தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. இது உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்..!
  • ஒரு சிறந்த புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்குச் சமம், ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம்..!
  • வெற்றியின் ரகசியம் என்ன? சரியான முடிவுகள். சரியான முடிவுகளை நீங்கள் எவ்வாறு எடுக்கிறீர்கள்? அனுபவம் மூலம். அனுபவத்தை நீங்கள் எவ்வாறு பெறுகிறீர்கள்? தவறான முடிவுகள் மூலம்..!
  • உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் உங்களை அழிக்க வரவில்லை. ஆனால், உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றலையும் சக்தியையும் உணரவைப்பதற்கு வருகின்றன. நீங்களும் கடினமானவர் என்பதை கஷ்டங்கள் அறிந்து கொள்ளட்டும்..!
  • உங்கள் முதல் வெற்றியின் பின்னர் ஓய்வெடுக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் இரண்டாவதாக தோல்வியடைந்தால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன..!
  • ஒருவரைத் தோற்கடிப்பது மிகவும் எளிதானது. ஆனால் ஒருவரை வெல்வது மிகவும் கடினமானது..!
  • நீங்கள் புகழுடன் பிறந்தால், அது ஒரு விபத்து. நீங்கள் புகழுடன் இறந்தால், அது ஒரு சாதனை..!
  • கற்றல் படைப்பாற்றலைத் தருகிறது. படைப்பாற்றல் சிந்தனைக்கு வழிவகுக்கிறது. சிந்தனை அறிவைத் தருகின்றது. அறிவு உங்களைச் சிறந்தவராக மாற்றுகின்றது..!
  • ஈடுபாடு இல்லாமல் உங்களால் வெற்றிபெற முடியாது. ஈடுபாட்டுடன் உங்களால் தோல்வியடைய முடியாது..!
  • வானத்தைப் பாருங்கள். நாங்கள் தனியாக இல்லை. முழு பிரபஞ்சமும் நமக்கு நட்பாக இருக்கிறது. மேலும் கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே சிறந்ததை வழங்க சதி செய்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story