ஏவுகணை நாயகனுக்கு ஒரு கவிதை..! இந்திய வளர்ச்சிக்கான விதை..!

ஏவுகணை நாயகனுக்கு ஒரு கவிதை..! இந்திய வளர்ச்சிக்கான விதை..!
X

abdul kalam kavithai in tamil-முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு ஒரு கவிதை 

Abdul Kalam History in Tamil Kavithai-காலம் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்'கலாம்'. அவரை இன்னும் சிறிது ஆண்டுகள் வாழவைக்க யோசித்திருக்'கலாம்'.

Abdul Kalam History in Tamil Kavithai

'இளைஞர்களே கனவு காணுங்கள், இந்திய எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது' என்கிற இந்த உத்வேக வரியை இளைஞர்களுக்கு வழங்கி வழிகாட்டியவர் அப்துல் கலாம். அவர் மறைந்தாலும் அவர் நாட்டுக்கு அளித்துள்ள எண்ணற்ற சேவைகளால் நம் தேசத்தை உலகம் திரும்பிப்பார்த்தது. எளிமையும் இனிமையும் நிறைந்த இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஐயா புகழ் எப்போதும் நிலைத்து இருக்கும். இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கும் கலாம் ஐயாவைப் போற்றி ஒரு கவிதை.


நீங்களும் படித்து மகிழுங்கள்.

தேசத்துக்கு தோள்கொடுத்த நாயகன்..!

வறுமையைக் கொல்வதற்கு

எறும்பினாய் ஆனாய்..

செய்தித்தாள் விற்பனையில்

சேதி சொல்ல வந்தவன் நீ..!

ஏவுகணை நாயகன் என்று

மூவுலகும் போற்றுதுனையே

சர்வ காலமும் பேசுது 'கலாம்' என்று

சர்வகலாசாலையும் பேசுது கலாம் என்றே ..!

வீசும் காற்றும்

பேசுது உன் பெயர் சொல்லியே..!

தேசம் கொண்டது பெருமை..

நேசம் கொண்டனர் தேசத்தினர்..!

ஒளியாக இருந்து

வழிகாட்டும் மொழிதந்தாய்..!

பொன்னென போற்றும்

கண்ணான சொல்லெடுத்தாய்..!

உளிகொண்டு செதுக்கினாலும்

உன்மொழிபோல வாராதென்று

மாணவக்குழந்தைகள்

தேனமுது குடித்த

வண்டாக மகிழ்கின்றார்..!

என்ன வித்தை செய்தாய்

உன்னைச் சரணடைய..?

அறிவினைச் செதுக்கும்

உளியாக இருந்தாய்

ஞானம் வளர்க்கும்

மொழியாக இருந்தாய்..!

அக்னி சிறகுகள் விரித்தே

அகண்ட உலகம் படைத்தாய்..!

ஆழ்ந்த இளைஞரின் கனவை

நனவாக்கச் செய்தாய்..!


தேசத்தின் சொத்தென்பார்..

அறிவுக்கு முத்தென்பார்..

நேசத்தின் வித்தென்பார்

பாசத்தின் ரத்தமென்பார்..

உன்

எளிமையின் வாசம்

கபடமற்ற சிரிப்பு

நாட்டைப்பற்றிய சிந்தை

இளைஞர்களின் விந்தை..

எல்லாம்

கலாம்..கலாம்..

நூல்களே உன்

சொத்தென்றாய்..

வால்கள் எல்லாம்

வானளவு காசு காண

வாலாட்டித் திரிந்தாலும்

சிகரமாய் நின்றாய்

சில்லறைகள் சேர்க்கும்

சிறுநரிக் கூட்டத்தில்

அன்னப்பறவையாய்

வெளுத்த பாலாக

வெண்மையாக இருந்தாய்..!


முதற்குடி மகனாய்

முத்தாக பணிபுரிந்தாய்..

முதற்குடி மகன் பதவி

பெருமை கொண்டது

நீ

அலங்கரித்த இருக்கையை

எண்ணி..!

கனவைக் காணாதே

கனவை நனவாக்கென்று

இளைஞனின் எழுச்சியாக

நின்றாய்..!

உன் சிரிப்பில்

ஒரு

கவர்ச்சி இருக்கிறது

அது

பெண்களை வீழ்த்தும்

வீணர்களின்

சிரிப்பல்ல...!

அது

அறிவின் வீச்சு..!


எதிர்காலம் நீதானென்று

நலம் பயக்கும்

நற்பாதை காட்டித்

தந்தாய்..!

இன்னும் சிறிது காலம்

இருந்திருக்'கலாம்'

என்றழுகிறது

இந்தியக் குழந்தைகள்..!

விண்ணில் இருந்து

விழுமியப் புன்னகையுடன்

எழுமின் நீ என்று

இளைஞர்களுக்கு வழிகாட்டு..!

இந்த

தேசத்தை

தோளில் சுமக்க

தீரத்தை ஊட்டு..!

அவர்கள்

சுமப்பது

இந்த தேசத்தின்

வளர்ச்சியை என்று

அவர்களுக்கு

ஞானம் கொடு..!


வீழ்ந்தாலும்

விதையாய் வீழ்வேன்

மரமாய் எழுவேன்

என்ற

தத்துவத்தின் மாதிரி 'கலாம்'

ஆமாம்

அப்துல் கலாம்..!

- காதம்பரி.க.மா


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
உங்களுக்கும் மனஅழுத்தம் இருக்கலாம்...! கவனமா இருங்க..!