நீட் தோ்வு: தமிழகத்தில் 1.55 லட்சம் போ் விண்ணப்பம்
கோப்புப்படம்
இந்தியாவில் இருக்கும் மாணவர்கள் மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவப் படிப்புகளை (MBBS / BDS / BAMS / BSMS / BUMS / BHMS) படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியம். இதில் AIIMS (All India Institute of Medical Sciences) மற்றும் JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) ஆகிய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அடங்கும். இந்தியாவில் மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நாடு முழுவதும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.9-இல் தொடங்கி மார்ச் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் 23,81,833 போ் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவா்களில் 10,18,593 போ் ஆண்கள், 13,63,216 பெண்கள், 24 போ் திருநங்கைகள். நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3,39,125 போ் தோ்வு எழுத விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1,55,216 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 11,000 போ் நிகழாண்டில் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu