பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு

பிளஸ் 2 தேர்வுகள் மே 5ஆம் தேதி, 10ம் வகுப்புக்கு மே 6-ல் பொதுத்தேர்வு
X
மே 5ம் தேதி தொடங்கி, மே 28 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன. 10ம் வகுப்புக்கு மே 6ம் தேதி தேர்வு தொடங்குகிறது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் தொடங்கும் தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் வெளியிட்டுள்ளார்.

பிளஸ் டு தேர்வு

அதன்படி, தமிழகத்தில், மே 5ம் தேதி தொடங்கி, மே 28 வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறுகின்றன. ஏப்ரல் 25, முதல், மே 2,ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். பிளஸ் 2, மாணவர்களுக்கு ஜூன் 23,ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் ஒன் தேர்வு

பிளஸ் ஒன் மாணவர்களுக்கு மே 9. முதல் மே 31,வரை பொதுத்தேர்வு நடைபெறும். ஏப்ரல் 25, முதல், மே 2,ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் ஜூலை 7,ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10,ம் வகுப்பு

அதேபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25, முதல், மே 2,ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.

மற்ற வகுப்புகள்:

மேலும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 2 முதல் 4ம் தேதி வரை செய்முறை தேர்வும்; மே 5 முதல் மே 13ம் தேதி வரை எழுத்துத்தேர்வும் நடக்கிறது.

விரிவான முழு தேர்வு அட்டவணை கல்வித்துறை இணையதளத்தில் சற்று நேரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் தடைபட்ட தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா தொற்று பிரச்னையால், 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் எழுந்தது. கடந்தாண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கும் 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில், தொற்றின் தாக்கம் குறைந்ததால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்துள்ளன. இதன் காரணமாக, பாடங்கள் குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளை நடத்த, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது.

மேலும், கடந்த மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இம்மாதம் பிற்பகுதியில் இரண்டாம் திருப்புதல் தேர்வும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!