இந்தியாவில் 6 மாதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி ரெடி: சீரம் நிறுவனம்

இந்தியாவில் 6 மாதத்தில் குழந்தைகளுக்கு  தடுப்பூசி ரெடி: சீரம் நிறுவனம்
X
இந்தியாவில் இன்னும் 6 மாதங்களில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாராகும் என்று, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு, இந்தியாவில் கடந்த ஜனவரி 2021 முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை அரசே இலவசமாக வழங்குகிறது. அத்துடன், தனியார் மருத்துவமனைகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் கிடைக்கிறது. நாட்டில் இதுவரை, இதுவரை 130 கோடிக்கும் மேலான தடுப்பூசிகல் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிகள் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு இன்னமும் தடுப்பூசி வழங்கப்படவில்லை. எனினும், 12-வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, ஜைடஸ் கடிலா நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதே நேரம், 12-வயதுக்கு கீழான சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு, அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை.

இச்சூழலில், இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் வகையில் தடுப்பூசி என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார். டெல்லி சிஐஐ மாநாட்டில் பேசிய அவர், தற்போது பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருக்கிறது என்று மேலும் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil