fig in tamil-அத்திப்பழம் எதுக்கு சாப்பிடணும்? தெரிஞ்சுக்கங்க..!

fig in tamil-அத்திப்பழத்தின் பயன் தெரியாமலேயே இதை பொறுக்கி எடுத்து சாப்பிட்ட காலங்களும் உண்டு. அதன் மருத்துவ குணங்களைத் தெரிஞ்சுக்கங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
fig in tamil-அத்திப்பழம் எதுக்கு சாப்பிடணும்? தெரிஞ்சுக்கங்க..!
X

fig in tamil-அத்திப்பழம் (கோப்பு படம்)

fig in tamil-அத்தி களிமண் நிறைந்த நிலப்பகுதிகள் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரக்கூடிய மரமாகும். அத்திப்பழம் என்று நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.


அத்திமரம் 6 முதல் 8 மீட்டர் உயரத்தில் அடர்த்தியாக வளரக்கூடிய மரமாகும். இந்த அத்தி மரத்தில் தான் அத்திப்பழங்கள். காய்க்கின்றன. அத்தி மரத்தில் பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி , நாட்டு அத்தி . அத்திப்பழம் கொத்தாக மரத்தின் அடிப்பகுதியிலோ அல்லது தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும்.


பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் வரை கிடைக்கலாம். கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை பயன்படுத்துவதற்கு பதப்படுத்தலாம்.

அத்திப்பழத்தின் பயன்கள்

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.


fig in tamil

தினசரி 2அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளைக்கு சாப்பிட்டு வரவேண்டும்.


சிறுநீரக புண்

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.

fig in tamil


பித்தம் போக

இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளவேண்டும். இந்த அத்தி இலை பவுடரைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் அடைகிறது. உடலின் எந்த வழியாகவும் இரத்தம் வெளியேறினாலும், அத்திப்பழம் கட்டுப்படுத்தும்.

வாய்ப்புண்

வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Updated On: 14 Feb 2023 9:08 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
  2. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...
  3. தொழில்நுட்பம்
    83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
  4. நாமக்கல்
    காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...
  5. தமிழ்நாடு
    ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
  6. தொழில்நுட்பம்
    Chandrayaan 3 Latest News-சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதைக்கு...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு
  8. தஞ்சாவூர்
    தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...
  9. டாக்டர் சார்
    Pani Vedippu குளிர்காலங்களில் ஏற்படும் பாத வெடிப்புகளைப் போக்க...
  10. ஈரோடு
    Vel Pray Song Release சென்னிமலையில் இருந்து பழனிக்கு ஜன., 1ம் தேதி...