சிறுநீர் தொற்று ஏற்பட்டால் என்ன அறிகுறிகளை காட்டும்..? தெரிஞ்சுக்கங்க..!

Urine Infection Symptoms Female in Tamil
உடற்பிரச்னை என்பது வெறும் உடலோடு நின்றுவிடுவதில்லை. அது மனதையும் பாதிக்கிறது. வழக்கமான பணிகளை செய்யமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்படும். இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை போராட்டம்தான்.
சில உடற்பிரச்னைகளில் அதன் அறிகுறிகள் ஆண் மற்றும் பெண்களுக்கு வேறுவேறு விதமான அறிகுறிகளைக்காட்டும். இருவருக்கும் பொதுவாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் ஒன்று சிறுநீர்த்தொற்று. சிறுநீர் தொற்றை அலட்சியமாக விட்டுவிடமுடியாது. இது பல இன்னல்களை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறுநீர் தொற்றுக்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

அடிக்கடி சிறுநீர்
காரணமே இல்லாமல் அடிக்கடி சிறுநீர் கழித்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. சில சமயங்களில் இவை ஆபத்தான நிலையை ஏற்படுத்தலாம். இது போன்ற அறிகுறி இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகுங்கள்.
வலியுடன் சிறுநீர்
சிறுநீர் கழிக்கும் போது பிறப்பு உறுப்பில் வலி அல்லது எரிச்சல் போன்று ஏற்பட்டால் அவை சிறுநீர்ப்பை தொற்றுகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இவை சில சமயங்களில் பெண்களுக்கு கருப்பையிலும் வலியை உண்டாக்கலாம். ஆகவே மருத்துவ சிகிச்சை அவசியம்.
சிறுநீரில் துர்நாற்றம்
சிறுநீர் கழிக்கும் போது ஒருவித துர்நாற்றம் ஏற்பட்டால் அலட்சியப்படுத்தக் கூடாது. சிறுநீர்ப்பையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் தான் இப்படிப்பட்ட துர்நாற்றம் ஏற்படும்.மேலும் இவை பாக்டீரியாக்களினால் ஏற்பட கூடிய தொற்றாகவும் இருக்கலாம்.
பசியின்மை
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தும் பசி இல்லையா? இது கூட உங்களை எச்சரிக்கும் அபாய மணியாக இருக்கலாம். இந்த சூழலில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரியாக கையாள வேண்டும். மேலும், நீர்ச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உட்கொள்வது பாதிப்பை குறைக்கும்.
வயிற்று உப்பிசம்
எதை சாப்பிட்டாலும் வயிறு காற்றடைத்த பைபோல உப்பிசமாக இருக்கிறதா? அல்லது மலச்சிக்கல் உள்ளதா? இது கூட சிறுநீர்ப்பை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறு இருக்கும் போது சற்று ஜாக்கிரதையாக மருத்துவ சிகிச்சை செய்வது பாதுகாப்பு.
காய்ச்சல்
சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தால் காய்ச்சல் வடிவிலும் எச்சரிக்கை செய்யும். இது சாதாரண காய்ச்சலாக இருக்காது. மாறாக உடலின் முழு தட்பவெப்பமும் குறைந்து குளிர் காய்ச்சலாக வெளிப்படும். இது போன்று காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை பார்த்துவிடவேணும்.
சிறுநீர் நிறம் மாறுதல்
urine infection symptoms in tamil-சிறுநீர் நுரை போன்று வந்தாலோ அல்லது சிறுநீரில் இரத்தம் வந்தாலோ அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கி விடும். கூடவே வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடும்.
முதுகு வலி
பின்புற முதுகில் வலி இருந்தாலோ அல்லது வயிற்றில் வலி ஏற்பட்டாலோ அது கூட சிறுநீர் பாதையில் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். மேலும், இது போன்ற வலிகளை சாதாரணமாக எண்ணிவிடாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறப்பு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu