சிறுநீர்த் தொற்று பெண்களைத் தான் அதிகம் பாதிக்கும்..! எப்படி பாதுகாக்கலாம்..?

Urine Infection Cure Tips in Tamil-சிறுநீர்த் தொற்று ஏற்படுவது சாதாரணமானது என்றாலும் பாதுகாப்பு முக்கியம். யோசிங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சிறுநீர்த் தொற்று பெண்களைத் தான் அதிகம் பாதிக்கும்..! எப்படி பாதுகாக்கலாம்..?
X

Urine Infection Cure Tips in Tamil-சிறுநீர் பாதை நோய்த்தொற்று(Urinary Tract Infection) பொதுவாக எல்லோருக்கும் வருவது.அது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் எப்பிற்று பிரிவினைப்பார்ப்பதில்லை. எல்லோரையும் பாதிக்கும். இருந்தாலும் இந்த நோய்க்கு பெண்கள் என்றால் பிடிக்கும் போலுள்ளது. ஆமாங்க..ஆதலால் பெரும்பாலும் இந்த நோய்த் தொற்று பெண்களுக்கு அதிகமாக வருகிறது.சுமார் 5ல் ஒரு பெண்ணுக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சிறுநீரத் தொற்று வந்துவிடுகிறது என்று ஒரு ஆய்வில் தெரியவனதுள்ளது. ஒரு சிறுநீரகம் என்பது யுரீட்டர், சிறுநீர்ப்பை மற்றும் யுரீத்ரா எல்லாம் சேர்ந்த ஒரு கூட்டுப்பகுதிதான் சிறுநீரக அமைப்பு.

தோல் மற்றும் மலக்குடல் வழியாக வரும் பாக்டீரியாக்கள், அப்படியே ஜாலியாக சிறுநீர்க்குழாய்க்குள் ட்ராவல் பண்ணி சிறுநீர் பாதையில் உள்ள உறுப்புகளை ஒரு பதம் பார்ப்பார்கள். அவர்களின் அந்த தொந்தரவால் UTI (Urinary Tract Infection) தொற்று ஏற்படுகிறது. இப்படி விசிட் போன அவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் கூட என்ஜாய் பண்ணி வாழ்வார்கள். அதனால் தொற்று சிறுநீர் பை மற்றும் சிறுநீரகத்திலும் இருக்கும்.

சிறுநீர் வெளியேறும் பாதையில் எந்த இடத்திலும் தொற்று ஏற்படலாம். உடலில் ஏற்படும் தொற்றுகளில் சிறுநீரகத் தொற்றுதான் இரண்டாவது இடம் வகிக்கிறது.

தொற்றுநோயின் அறிகுறிகள்:

இந்த தொற்று சிறுநீரகத்தின் வெவ்வேறு உறுப்புகளை அடையும் போது வெவ்வேறு அறிகுறிகளாக காணப்படுகின்றன.

சிறுநீர்ப்பை நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

  • அடிக்கடி சிறுநீர் கழிப்பது.
  • சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் சிறுநீர் சிறிதே வெளி செல்லும்.
  • சிறுநீர் துவாரம் எரியும்.
  • அடிவயிற்றில் தசைப்பிடிப்பு
  • சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறலாம்.
  • சிலர் சோர்ந்து காணப்படுவார்கள்.
  • சிறுநீர் நிறம் மாறி இருக்கலாம்.

சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

  • அதிக காய்ச்சல்
  • குளிர் மற்றும் நடுக்கம்
  • கீழ் முதுகிலும், பின்புறத்தின் பக்கத்திலும் வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • சிறுநீரில் ரத்தம் கலந்து இருக்கலாம்.

சிறுநீர்க்குழாய் நோய்த்தொற்றின் அறிகுறிகள்:

  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு.
  • அதிக அளவு சிறுநீர் கழிப்பது.

urine infection cure tips in tamil

இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்?

பெண்கள் மற்றவர்களை விட யுடிஐ நோய்க்கு அதிகம் பாதிக்கப்படலாம். காரணம் என்னவென்றால், உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய், மருத்துவ ரீதியாக ஒரு யூரித்ரா (urethra) என அழைக்கப்படுகிறது. இது பெண்களின் விஷயத்தில் குறுகிய மற்றும் ஆசனவாய்க்கு நெருக்கமாக உள்ளது.

ஆசனவாய் ஈ.கோலை பாக்டீரியாவின் நீர்த்தேக்கம் என்பதால், இந்த பாக்டீரியா பெண்ணின் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களுக்கு பயணிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல, வயதானவர்கள் யுடிஐக்களை வளர்ப்பதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில் அவர்களின் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாக்க முடியாது. இதையடுத்து சிறு குழந்தைகளுக்கு எளிதாய் இப்பாதிப்பு வரலாம்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் பொதுவான மருத்துவ நிலைமைகள்:

ஆசனவாயிலிருந்து வரும் பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதையில் நுழையும் போது யுடிஐ பொதுவாக நிகழ்கிறது. பின்வரும் நிலைமைகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு காரணமாக அமைகின்றன.

  • சிறுநீரக கற்கள் சிறுநீர் பாதையைத் தடுக்கும் போது UTI ஏற்படலாம்.
  • ஆண்களில் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் அவர்களின் சிறுநீர்ப்பையை முழுவதுமாக காலியாக்குவது கடினம். அப்போது இந்த நோய் ஏற்படலாம்.
  • குழந்தைகள் மலச்சிக்கலால் பாதிக்கப்படும் போது நோய் ஏற்படலாம்.

urine infection cure tips in tamil

  • ஒருவருக்கு நீரிழிவு போன்ற ஒரு முறையான நோய் இருக்கும்போது UTI ஏற்படலாம்.
  • புற்றுநோய் அல்லது எச்.ஐ.வி காரணமாக ஒருவருக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது
  • சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் வரலாம்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க என்ன செய்யலாம்?

  • தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • சிறுநீரை அடக்காதீர்கள். ஏனெனில் இது UTI அபாயத்தை அதிகரிக்கும்.
  • சிறுநீர் கழிக்கும் போது அவசரப்பட வேண்டாம். ஏனெனில் இது உங்கள் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாக்குவதைத் தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.
  • பிறப்புறுப்பு பகுதியில் டச் (douche), ஸ்ப்ரே அல்லது பவுடர் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.
  • பிறப்புறுப்பு பகுதியின் சரியான சுகாதாரத்தை பராமரிக்கவும்.
  • முடிந்தால் பொது கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.
  • cranberry juice அல்லது மாத்திரைகள் சிறுநீர் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.
  • புரோபயாடிக்குகளை உட்கொள்ளுங்கள். அவை சிறுநீரத் தொற்றை தடுக்க உதவும்.

புரோபயாடிக்குகள் என்பது உயிருள்ள நுண்ணுயிரிகளாகும். பொதுவாக குடல் போன்ற உள்ளுறுப்புகளை மேம்படுத்துதல் அல்லது மீட்டெடுப்பற்கு உதவுகின்றது. புரோபயாடிக்குகள் உட்கொள்வது பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
  3. இந்தியா
    உத்தரகாண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்க உதவிய ‘எலிவளை’ தொழில் நுட்பம்
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் இல்லனா என்ன இந்த சட்னி செய்து பாருங்க...!
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் 108 ஆம்புலன்சில் பிறந்த இரட்டை...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  7. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்