புற்று நோயை தடுக்கும் டர்னிப்ஸ் கிழங்கு..! அவசியம் தெரிஞ்சுக்கங்க..!

Turnip in Tamil Images
Turnip in Tamil Images-டர்னிப்ஸ் கிழங்கு தமிழில் கோசுக்கிழங்கு அல்லது சீமை சிவப்பு முள்ளங்கி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அது எப்படி அழைக்கப்பட்டாலும் அது ஒரு வேர்வகை தாவரவகை காய்கறியாகும். அது கிழங்கு வகை காயாகும்

உடல் ஆரோக்கியத்திற்கு டர்னிப்ஸ் மிக உகந்த பயன்கள் கொண்டவை. பலருக்கு டர்னிப்ஸ் கிழங்கின் பயன்கள் தெரிவதில்லை. இதன்மூலமாக தெரிந்துகொண்டு அதை உண்ண முயற்சி எடுங்கள். இது முட்டைக்கோஸ், பிராக்கோலி மற்றும் முள்ளங்கி போன்ற காய்கள் குடும்பத்தைச் சேர்ந்தது.

ஆம் டர்னிப்கள் மற்ற கோஸ் குடும்பத்து காய்களை போலவே மிகவும் சத்தானது. பொதுவாக இதன் கிழங்கு உணவாக பயன்படுத்தபப்ட்டு வருகிறது. ஆனால், இதன் இலைகளும் கூட மிகச் சத்தானவை. மேலும் சமைக்க உகந்தவை. ஆகவே, டர்னிப்ஸ் இலைகளை கீரைபோல சமைத்து சாப்பிடலாம்.
டர்னிப்ஸ் அடங்கியுள்ள சத்துக்கள்
டர்னிப்பில் 1 கிராம் புரதம், 2 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் கார்போஹைட்ரெட், மற்றும் 28கிராம் கலோரிகள் உள்ளடங்கியுள்ளது. இதில் கொழுப்புசத்து சிறிதும் இல்லை. ஒரு டர்னிப் சாப்பிட்டால் அன்றைய தினம் உடலுக்குத் தேவையான வைட்டமின் "சி" இல் பாதியளவைத் தந்துவிடுகிறது. அந்த அளவுக்கு டர்னிப்ஸில் வைட்டமின் 'சி' உள்ளது.
டர்னிப்ஸில் உள்ள சில முக்கிய பயன்கள் கீழே தரப்பட்டுள்ளன :

ஜீரணசக்திக்கு சிறந்தது
டர்னிப்ஸ் மலச்சிக்கல், வயிற்று வீக்கம், அஜீரணம், வயிற்றுப் போக்கு போன்றவற்றை தடுக்கிறது. டர்னிப்ஸில் உள்ள நார்ச்சத்து உங்களுக்கு தேவையான ஜீரணசக்தியை அதிகரிக்கிறது. அதனால் மலச்ச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.
turnip in tamil
சீரான இரத்த அழுத்தம்
டர்னிப்ஸில் உள்ள உடலுக்கு நன்மை தரக்கூடிய நைட்ரேட்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகள் இரத்த அழுத்தத்தை சமன் செய்கிறது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் உங்கள் உடலில் அதிகமாக இருக்கும் சோடியத்தை வெளியேற்றுகிறது.
மேலும் இது தமனிகளை ஆசுவாசப்படுத்தி, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற வியாதிகள் வருவதை குறைக்கிறது.

புற்றுநோய் தடுக்க
டர்னிப்ஸில் உள்ள சல்போரபைன் எனும் வேதிப்பொருள் சிலவகை புற்றுநோய்கள் வராமல் தடுப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. (தோல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய்).
மேலும் டர்னிப்ஸில் உள்ள தாவர ஊட்டச்சத்தான இண்டோல்ஸ் (Indoles) என்பவை பெருங்குடல் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
உடல் எடை குறைய
டர்னிப்ஸ் மிகக்குறைந்த கலோரிகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்துகள் உங்கள் பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது. அதனால் இது உங்கள் உடல் எடை குறைய இது வழிவகுக்கிறது.
வைட்டமின் "சி"
டர்னிப்ஸில் வைட்டமின் 'ஏ' 'சி' பீட்டாகரோட்டின் மற்றும் மாங்கனீசு சத்துகள் உள்ளன. இவை சரும ஆரோக்யத்திற்கு உதவுகிறது. இந்த சத்துகள் வயது முதிர்ச்சியால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது.
உடல் துர்நாற்றத்திற்கு தீர்வு
தினமும் டர்னிப் ஜூஸ் அருந்தினால், உடல் துர்நாற்றம் மறையும். மேலும் ஒரு கரண்டி டர்னிப் சாற்றை உங்கள் அக்குள்களில் பூசிக்கொள்ளலாம். மேலும் வெடிப்புற்ற பாதங்களில் டர்னிப் சாற்றை பூசுவதால் வெடிப்பு மறையும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu