triglycerides meaning in tamil-ட்ரைகிளிசரைடுகள் உடலில் கூடினால் என்ன நடக்கும் தெரியுமா..? உடனே தெரிஞ்சுக்கங்க..!

triglycerides meaning in tamil-உயர் மாவுச்சத்து கொழுப்பு அமிலங்கள் என்று தமிழில் கூறப்படுவதைத்தான் 'ட்ரைகிளிசரைடுகள்' என்று மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
triglycerides meaning in tamil-ட்ரைகிளிசரைடுகள் உடலில் கூடினால் என்ன நடக்கும் தெரியுமா..? உடனே தெரிஞ்சுக்கங்க..!
X

triglycerides meaning in tamil-ட்ரைகிளிசரைடுகள் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள்.(கோப்பு படம்) 

ட்ரைகிளிசரைடுகள் என்றால் என்ன?

triglycerides meaning in tamil-உடலில் உள்ள மிகவும் பொதுவான கொழுப்பு. மேலும் இது நம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு அல்லது லிப்பிட் ஆகும். இதை தமிழில் உயர் மாவுச்சத்து கொழுப்பு அமிலங்கள் என்று நாம் கூறுகிறோம். உடலில் தேவைக்கு அதிகமான கலோரிகள் இருக்கும்போது ட்ரைகிளிசரைடுகள் உருவாகின்றன. அவை கொழுப்பு உயிரணுக்களில் சேமிக்கப்படுகின்றன. மேலும் உணவுக்கு இடையில் உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது அந்த கொழுப்பு பயன்படுத்தப்படுகின்றன.


அடிக்கடி அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொண்டால் அல்லது எரிக்கப்படுவதை விட அதிக கலோரிகளை உட்கொண்டால், இரத்தத்தில் அதிக ட்ரைகிளிசரைடுகள் இருக்கலாம். ட்ரைகிளிசரைடுகள் பொதுவாக நாம் சாப்பிடும் வெண்ணெய், எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் காணப்படுகின்றன. லிப்பிட் பேனல் அல்லது லிப்பிட் எனப்படும் எளிய இரத்தப் பரிசோதனையானது, உங்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் கூறுகிறது.

triglycerides meaning in tamil

பின்வரும் அட்டவணையில் இருந்து உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் இயல்பான மற்றும் அதிக அளவுகளை அறிந்து கொள்ளலாம்.

ட்ரைகிளிசரைடு அளவுகள்


அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள் ஏன் தீங்கு விளைவிக்கின்றன?

உயர் ட்ரைகிளிசரைடுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அவை தமனிகளை தடிக்கச் செய்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், குறைந்த அளவு நல்ல கொழுப்பு மற்றும் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ட்ரைகிளிசரைடுகள் அதிகரித்தால் அது கல்லீரல் மற்றும் கணைய நோய்களுடன் தொடர்புடையதாக அமையும்.

உயர் ட்ரைகிளிசரைடுகளின் அறிகுறிகள்?

அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அரிதான சந்தர்ப்பங்களில், அதிகரித்த அளவுகள் ஒரு மரபணு நிலை காரணமாக இருந்தால், தோலின் கீழ் கொழுப்பு படிவுகள் இருப்பதை காணலாம்.

triglycerides meaning in tamil

எந்த நிலையில் மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

ட்ரைகிளிசரைடு அளவு மிக அதிகமாக இருந்தால் அல்லது உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் பிறவற்றை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவர் மேலதிக பரிசோதனைகளை செய்ய பரிந்துரைக்கலாம்.


உயர் ட்ரைகிளிசரைடுகள் எதனால் ஏற்படுகிறது?

தற்கால வாழ்க்கை முறைக் காரணிகள் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகளை அதிக அளவில் உருவாக்க வழிவகுக்கின்றன. அவை ட்ரைகிளிசரைடுகளின் காரணங்களை விட அதிக ஆபத்துக் காரணிகளாகும்:

1. அதிக கலோரி கொண்ட வழக்கமான உணவு

2. உடல் பருமன்

3. அதிகப்படியாக மது அருந்துதல்

4. மரபணுக் கோளாறுகள்

5. தைராய்டு நோய்கள்

6. சிகரெட் புகைத்தல்

7. கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள்

8. மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட வகை 2 நீரிழிவு நோய்

9. குறிப்பிட்ட சில மருந்துகள்

triglycerides meaning in tamil

ட்ரைகிளிசரைட்களுக்கான ஆபத்து காரணிகள் எவை?

சில காரணிகள் ட்ரைகிளிசரைடுகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன. அவை:

  • உயர் இரத்த சர்க்கரை மற்றும் நீரிழிவு
  • அதிக எடை
  • புகைபிடித்தல்
  • உடற்பயிற்சி இல்லாமை
  • உயர் இரத்த அழுத்தம்

ட்ரைகிளிசரைடுகளுக்கான சிகிச்சைகள் என்ன?

ட்ரைகிளிசரைடுகள் உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் பிற வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் குறைக்கப்படலாம். வாழ்க்கைமுறை மாற்றங்கள் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தத் தவறினால் மருந்துடன் சிகிச்சை தொடரப்படவேண்டும். ஆரோக்யமான வாழ்க்கை முறை தேர்வுகள் ட்ரைகிளிசரைடுகளில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

triglycerides meaning in tamil

வழக்கமான உடற்பயிற்சி

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். லிப்டைப் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறுவது, அருகில் உள்ள கடைகளுக்கு நடப்பது, வேலையில் அடிக்கடி ஓய்வு எடுப்பது போன்ற ஆரோக்யமான பழக்கங்களையும் சேர்த்துக் கொள்வது நல்லது. வழக்கமான உடற்பயிற்சி, உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கிறது.


எடை இழப்பு

ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகரிப்பதற்கு உடல் பருமன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உடல் எடையை குறைக்கும் போது, ​​கலோரிகள் எரிக்கப்பட்டு, ட்ரைகிளிசரைடு அளவு தானாகவே குறைந்துவிடும்.

ஆரோக்யமான உணவு

கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைப்பதற்கு ஆரோக்யமான உணவுமுறையே முக்கியமாகும். சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அதிக கலோரி உணவுகளை குறைக்க வேண்டும். உட்கொள்ள வேண்டிய உணவுகளில் அதிக நார்ச்சத்து, புரதங்கள், ஆரோக்யமான கொழுப்புகள் மற்றும் குறைந்த கலோரி உணவுகள் ஆகியவை அடங்கும்.

triglycerides meaning in tamil

மது அருந்தக் கூடாது

ஆல்கஹால் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரையைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது ட்ரைகிளிசரைடுகளின் அதிகரிப்பை ஏற்படுத்தும். மதுவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோலவே சிகரெட் புகைப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மருந்துகளுடன் உயர் ட்ரைகிளிசரைடுகளைக் கட்டுப்படுத்துதல்

ட்ரைகிளிசரைடுகளின் உயர்ந்த அளவைக் குறைப்பதற்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில், ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைப்பதற்கு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். பொதுவான சில மருந்துகள் :

  • ஃபைப்ரேட்ஸ்
  • மீன் எண்ணெய்
  • நியாசின்
  • ஸ்டேடின்கள்
  • PCSK9 தடுப்பான்கள்

மருத்துவர் மருந்துகளை பரிந்துரை செய்தால் பரிந்துரைக்கப்பட்டபடி அவற்றை முறையாக உட்கொள்ள வேண்டும். மருந்துகளுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவை உண்ணவும், உடற்பயிற்சி செய்யவும் மறக்கக் கூடாது. உணவும் உடற்பயிற்சியும் முக்கியமானவை ஆகும். மேலும் அவ்வாறு செய்தால் அதிக ட்ரைகிளிசரைடுகளை திறம்பட குறைக்கும்.

triglycerides meaning in tamil

அதிக அளவு ட்ரைகிளிசரைடுகளின் சிக்கல்கள் என்ன?

அதிக அளவு ட்ரைகிளிசரைடுகள் கரோனரி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மிக அதிகமான ட்ரைகிளிசரைடுகள் கடுமையான கணைய அழற்சியின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். இந்த நிலையில், கணையம் வீக்கமடைந்து அடிவயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

ட்ரைகிளிசரைடுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

உயர்-ட்ரைகிளிசரைடுகளுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை எளிய வாழ்க்கைமுறை மாற்றங்களால் தவிர்க்கலாம் அல்லது தடுக்கவும் செய்யலாம். தினசரி அடிப்படையில் அதிக கலோரி உணவுகளைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருக்குமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். சிகரெட் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் அதிக அளவுகளை குறைக்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ட்ரைகிளிசரைடு எண்ணிக்கையை சாதாரண அளவில் வைத்திருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை போதுமானது.

Updated On: 24 Dec 2022 7:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப இடமாறுதல்...
  2. தென்காசி
    தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆயிரம் கன அடியாக
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு நிலவரம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் மற்றும் இருப்பு நிலவரம்
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் இன்று (புதன்கிழமை) மின்தடை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை தீபத் திருவிழா; பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்,...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை நிலவரம்
  9. தமிழ்நாடு
    TRP Exam- பட்டதாரி ஆசிரியர், பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பிக்க...
  10. நாமக்கல்
    திமுக கலை இலக்கியப் பேரவை சார்பில் நாமக்கல்லில் கவிதை ஒப்புவித்தல்...