உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, குதிரைவாலி அரிசி சாதம் சாப்பிடுங்க...!

செரிமானம், கண் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி என, பலவித மருத்துவ பயன்களை கொண்டது குதிரைவாலி அரிசி.
சிறுதானியங்களின் பலன்களை பற்றி மக்கள் அதிகம் தெரிந்து வைத்துள்ளனர். சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த மாதம், பார்லிமெண்ட் வளாகத்தில் சிறுதானிய தினம் கடைபிடிக்கப்பட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள், காங்., தலைவர் கார்கே உள்ளிட்ட பிற கட்சித்தலைவர்கள் எம்.பி.,க்கள் அனைவரும் பார்லிமெண்ட் வளாகத்தில் அமர்ந்து சிறுதானிய உணவுகளை மட்டுமே சாப்பிட்டனர்.
சிறுதானியங்களில் விதவிதமான உணவுகள் செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, சிறுதானியங்களை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தமிழர்கள் அதிகம் பயன்படுத்தும் குதிரைவாலி அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்களையும், அவை தரும் நற்பயன்களையும் காணலாம்.
ஊட்டச்சத்துகள்
குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை வளமான அளவில் உள்ளது. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட ஆறு மடங்கு நார்ச்சத்து குதிரைவாலி அரிசியில் உள்ளது. மேலும் கால்சியம், பீட்டா கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களையும் உள்ளடக்கியது.
100 கிராம் குதிரைவாலி அரிசியில், கலோரிகள் : 300 kcal
கொழுப்பு : 3.6 கிராம், நார்ச்சத்து : 13.6 கிராம், புரதம் : 11 கிராம், கார்போஹைட்ரேட் : 55 கிராம், கால்சியம் : 22 மி.கி, வைட்டமின் பி 1: 0.33 மி.கி, இரும்புச்சத்து : 18.6 மி.கி, வைட்டமின் பி 2 : 0.10 மி.கி, வைட்டமின் பி 3 : 4.2 மி.கி உள்ளது.
குதிரைவாலி அரிசி நன்மைகள்
சர்க்கரை நோய்
இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். ஏனெனில், இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
செரிமான பிரச்னைகள்
குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
சிறுநீரை பெருக்கும்
குதிரைவாலி அரிசி சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்க உதவுகிறது.
குதிரைவாலி அரிசி மருத்துவ பயன்கள்
கண் ஆரோக்கியம்
குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் சத்து வளமான அளவில் இருப்பதால் கண் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
மலச்சிக்கல்
குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படும். இவர்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu