/* */

தைராய்டு பாதிப்பும்.. பாதுகாக்கும் வழிமுறைகளும்…

தைராய்டு பாதிப்பு யாருக்கெல்லாம் ஏற்படும் என்பது குறித்தும் அந்த நோயில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தைராய்டு பாதிப்பும்.. பாதுகாக்கும் வழிமுறைகளும்…
X

நம் உடலில் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். உடலில் தைராய்டு சுரப்புக்குறை எற்படுவதால், எந்நேரமும் தூக்கம், மறதி, உடல் தைராய்டு சுரப்புக்குறை ஆகியன மக்கள் தொகையில் மூன்று சதவீதம் பேருக்கு இருக்கின்றது. தைராய்டு, பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால் ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெல்லிக்காய் அளவில் கழுத்தில் ஒரு வீக்கம் தெரிகிறதா?

கொஞ்சமாக சாப்பிட்டும்கூட எடை கூடிக்கொண்டே இருக்கிறதா?

உற்சாகமின்றி அடிக்கடி களைப்புடன் காணப்படுகிறீர்களா?

இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்குப் பதில், ஆமாம் என்றால் கூட உங்களுக்கு தைராய்டு தொடர்பான சிக்கல் உண்டாகியிருக்க வாய்ப்பு உண்டு.

தைராய்டு அறிகுறிகள்:

கழுத்தின் முன்பக்கமாக இருக்கிறது தைராய்டு சுரப்பி. அங்கே புடைத்துக்கொண்டிருக்கும் பகுதியை ஆடம்ஸ் ஆப்பிள் என்பார்கள். அதற்கு கொஞ்சம் கீழே இருக்கிறது தைராய்டு. சுவாசக்குழாய்க்கு முன்புறமும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக விரிந்திருக்க, நடுவே சுருங்கி இருக்கிறது இந்த சுரப்பி.

ஒரு பட்டாம்பூச்சிபோல் தோற்றம் அளிக்கிறது இது. தைராய்டு சுரப்பி, தைராக்ஸின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இது உடலின் பல வேலைப்பாடுகளுக்கு அடிப்படையாகிறது. முக்கியமாக உடலில் மெடபாலிஸத்துக்கு அதாவது மாவுச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவற்றின் செரிமானத்தை இது கட்டுப்படுத்துகிறது.

தசை வளர்ச்சி எலும்புகளின் உருட்கி ஆகியவற்றுக்கு தைராய்டு முக்கியச் காரணமாக அமைகிறது. தைராக்ஸின் குறைவாகவோ, அதிகமாகவோ, சுரக்கும்போது பிரச்னைகள் உண்டாகின்றன. தைராக்ஸின் போதிய அளவில் சுரக்க வேண்டும் என்றால் அதற்கு அயோடின் சத்து தேவை. அயோடின் தான் தைராக்ஸின் சுரப்பதற்கு தூண்டுகோலாக இருக்கிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் தண்ணீரிலேயே நம் உடம்புக்கு இந்த அயோடின் சத்து கிடைத்துவிடுகிறது என்றாலும் மலைப்பகுதியில் வாழ்பவர்களுக்கு அங்குள்ள தண்ணீரிலும், உப்பிலும் வழக்கத்தைவிட குறைவான அயோடினே இருப்பதால் தைராக்ஸின் குறைவாகச் சுரந்து சிக்கல்களை உண்டாக வாய்ப்பு அதிகம்.

யாருக்கு அதிக பாதிப்பு:

நகரங்களில் வசிப்பவர்களுக்கும் தைராக்ஸின் குறைபாடு ஏற்படுவது உண்டு. அதுவும் இப்போதெல்லாம் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது.

பிரசவம், பூப்பெய்தல், மாதவிலக்கு போன்ற சமயங்களில் உடலிலும், மனத்திலும் உண்டாகும் இறுக்கங்கள் காரணமாகவும் தைராய்டு பிரச்னைகள் உண்டாகலாம். அப்போது உடலுக்கு தைராக்ஸின் தேவை அதிகமாக ஏற்படலாம். அந்த அளவுக்கு இந்த ஹார்மோன் சுரக்காதபோது, தைராய்டு சுரப்பி தன்னை பெரிதாகிக்கொள்ளும். அப்படியாவது தைராக்ஸின் அதிகம் சுரக்கட்டும் என்பதற்காக இயற்கை செய்யும் விந்தை இது. ஆனால் அப்போதும் போதிய தைராக்ஸின் கிடைக்காமல் போகலாம்.

நாளடைவில் உடலுக்கு தேவையான அளவு தைராக்ஸினை இந்த சுரப்பியால் சுரக்கமுடிந்தால் பெரிதான சுரப்பி தானாகவே பழைய நிலையை அடையக்கூடும். அப்படி இல்லையென்றால் வீக்கம் தொடர்ந்து பெரிதாகும். மிக அதிக அளவில் பெண்கள்தான் தைராய்டு பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு ஒரு முக்கிய காரணம் இப்போதைய பரபரப்பான வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தங்கள். முதலில் பட்டாணி அளவுக்குதான் இந்த சுரப்பி வீங்கும். அதற்கு பிறகு, பெரிய நெல்லிக்காய் அளவில் விரிவடையும். பின்னர் மேலும் பெரிதாகும். சிலருக்கு தொடக்கத்திலேயே தொண்டைப் பகுதியில் இரண்டு மூன்று கட்டிகள் தோன்றலாம்.

புற்றுநோய்க்கு அறிகுறி:

இவை ஒவ்வொன்றும் பெரிதாகும் போது நாளடைவில் பார்க்கவே விகாரமாக இருக்கும். அதேசமயம் பார்வைக்கு விகாரமாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே இதில் ஏற்படும் பிரச்னை அல்ல. பெரும்பாலும் பெரிதாக வளர்ந்துவிட்ட தைராய்டு சுரப்பி மீண்டும் பழைய நிலையை அடைவதில்லை. உள்ளுக்குள் ரத்தக்கசிவும் ஏற்படலாம். அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். மருந்தினால் இதை குணப்படுத்திவிட முடியாது.

அறுவை சிகிச்சையின் மூலம் வீக்கப்பகுதியை நீக்கிவிடுவார்கள். தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தால் கழுத்துப்பகுதியில் வீக்கம் கட்டாயம் தோன்றுமா? என்றால், அவசியமில்லை. வீக்கம் இல்லாமல் கூட தைராக்ஸின் மிகக் குறைவாக சுரக்கலாம்.

இதற்கு ஆயுள் முழுவதும் மாத்திரைகள் உட்கொள்ளவேண்டி இருக்கும். தைராக்ஸின் அதிகமாக சுரப்பதும் சிக்கல்தான். தைராக்ஸின் அதிகமாக சுரக்கும் நபரின் கைகளில் நடுக்கம் இருக்கும். அவர்களால் வெப்பத்தை தாங்க முடியாது. சரியாக தூங்க முடியாது. கண்கள் வீங்கும். எடை குறையும். மருந்துகளின் மூலம் தைராக்ஸின் சுரப்பதைக் குறைக்கலாம்.

சிகிச்சை முறைகள்:

கதிரியக்க அயோடின் சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியையே செயலற்றதாக ஆக்க முடியும். அறுவை சிகிச்சை மூலம் தைராய்டு சுரப்பியை நீக்குவதும் ஒரு வழிதான். தைராக்ஸின் குறைவாக சுரந்தால் முதல் கட்டமாக மாத்திரைகள் மூலம் இந்த குறைபாட்டை சரிசெய்ய முயற்சிக்கப்படும்.

வீக்கம் அதிகமாகி பார்வைக்கு உறுத்தலாக இருக்கும் நிலையில், இதை சரிசெய்யத்தான் தைராய்டு சுரப்பியில் வீங்கிய பகுதி அறுவைச்சிகிச்சையின் மூலம் நீக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையின் மூலம் தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியையோ அல்லது அதை முழுவதுமாகவோ நீக்கிட்டால் அதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் தினமும் தைராக்ஸின் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டி இருக்கும்.

சாப்பிடக் கூடியவை:

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மில்லி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்து பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

பாதுகாப்பு முறை:

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக்கொள்ள கூடாது. உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டை தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

Updated On: 26 Nov 2022 4:39 PM GMT

Related News

Latest News

 1. தொழில்நுட்பம்
  விண்வெளிக்கு ஒரு குறுகிய பயணம் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?
 2. தொழில்நுட்பம்
  செவ்வாய் கிரகத்தில் இரண்டு புதிய பள்ளங்களுக்கு பீகாரில் உள்ள...
 3. திருவள்ளூர்
  பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பாலாலயம்..!
 4. கோவை மாநகர்
  தனியார் மருத்துவமனை கொலை விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா..!
 5. வீடியோ
  உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? Selvaperunthagai-யை பந்தாடிய...
 6. லைஃப்ஸ்டைல்
  'பூவரசு' மரமல்ல அது மருந்தகம்..! இயற்கை தந்த வரம்..!
 7. வீடியோ
  தயாராகிறது Annamalai 2.0 மெகா நடைபயணம் | Delhi தலைமை Green சிக்னல்...
 8. லைஃப்ஸ்டைல்
  மாம்பழத்தில் செய்யப்படும் 7 வகையான ருசியான உணவு ரகங்கள் பற்றி...
 9. உலகம்
  குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழப்பு
 10. ஈரோடு
  ஈரோட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு