கொரோனா இன்னும் இருக்குங்க..! பாதுகாப்பு முக்கியம்..!

symptoms of corona in tamil-கொரோனா குறைந்து இருந்தாலும், அரசு கூறியுள்ள வழிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

HIGHLIGHTS

கொரோனா இன்னும் இருக்குங்க..! பாதுகாப்பு முக்கியம்..!
X

symptoms of corona in tamil-கொரோனா அறிகுறிகள் (கோப்பு படம்)

symptoms of corona in tamil-அடை மழை விட்டாலும் செடிமழை விடாது என்பதுபோல கொரோனா குறைந்தாலும் கூட அங்கங்கு இன்னும் இருப்பது நமக்கு நன்றாகவே தெரியும். முற்றிலும் இல்லை என்கிற நிலைவரை எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. இருந்தாலும் நாம பாதுகாப்பா இருக்கனுங்க.

அதனால், வெளியில் போகும்போது கட்டாயம் மாஸ்க் போடுங்க. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இன்னும் கூடுதல் கவனம் தேவை. வீட்டுக்குள் நுழையும்போது சானிடைசர் கொண்டு கையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

சோதனை

கோவிட்-19 எனப்படும் கொரோனா நோயறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஒரு விரைவான காப்பூக்கிச் சோதனை (Rapid Antigen Test) அல்லது காப்பூக்கிச் சோதனை கிடைக்காத பட்சத்தில், பி.சி.ஆர். சோதனை (PCR test) செய்து கொள்வது பாதுகாப்பானது.

சோதனையில் நேர்மறையான சோதனை முடிவு வந்திருந்தால் தொற்று நோயாளிகளில் ஒருவர் என்பது உறுதியாகிறது. உடனடியாக 7 நாட்களுக்குக் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல்

கொரோனா நோய்த்தொற்று இருந்தால், 7 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தலில் (isolation) இருந்து வெளியேறலாம். மீண்டும் ஒரு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை அனைவருக்கும் இலவசமாக செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் (visitors), புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்கள் போன்றவர்கள் மற்றும் மருத்துவ அட்டை ஒன்று இல்லாதவர்களும் இதில் அடங்குவர்.

symptoms of corona in tamil

கொரோனா நோயறிகுறிகள்:

ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நெருக்கமான நபர், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவர்களுக்கு ஆதரவு தேவைப்படலாம். ஆகவே அவர்களுக்கு செய்யக்கூடிய மிக முக்கியமான காரியம் அவர்களுக்கு ஏற்படும் நோயறிகுறிகளை, குறிப்பாக அவை மோசமாகி வருவதாக உணர்ந்தால், கண்காணிக்க வேண்டும்.அவர்களுக்கு ஆதரவாக மனதைரியத்தைக் கொடுக்கவேண்டும்.

கொரோனா ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமாகப் பாதிக்கிறது. மேலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான நோயறிகுறிகள் இருக்காது. சில நோயறிகுறிகளுக்கு எப்போதும் மருத்துவக் கவனிப்பு தேவைப்படும்.

இலேசான நோயறிகுறிகள் இருந்தால் வீட்டில் ஓய்வெடுத்துக் குணமடையலாம். உறவினர் அல்லது அருகில் இருப்பவர்களுக்கோ இத்தகைய நோயறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பாதுகாப்பாக வீட்டில் தங்க வைக்கவேண்டும்.

 • மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு
 • தொண்டைப்புண்
 • வலிகள் மற்றும் வேதனைகள்
 • இருமல்
 • வறட்டு இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்

உங்களுக்கு வழக்கமாக இருமல் இருக்கிறது என்றால், அது வழக்கத்தை விட மோசமாக இருக்கலாம்

 • வழக்கத்தைக் காட்டிலும் அதிக சோர்வாக இருப்பதாக உணர்தல்
 • தலைவலி
 • சுவை மற்றும் வாசனை இழப்பு அல்லது அவற்றில் மாற்றம்
 • பசியின்மை அல்லது குமட்டல் (nausea)
 • வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு
 • 38 டிகிரி செல்சியஸுக்கு மேற்பட்ட வெப்பநிலை
 • நடுக்கம் (shakes) அல்லது வெடவெடப்பு (shiver)
 • சோகமாக, கவலையாக அல்லது பயமாக இருப்பதாக உணர்தல்
 • தலைச்சுற்றல் (dizziness) அல்லது மயக்க உணர்வு (light-headedness)
 • விறுவிறுப்பாக மாடிக்கு நடக்கும்போதோ அல்லது இருமும்போதோ இலேசான மூச்சுத் திணறல்

வீட்டிலேயே சிகிச்சை

மிதமான நோயறிகுறிகளைக் கொண்ட ஒருவர் முழுவதுமாக மூச்சுவாங்காமல் பேச முடியும். மேலும் மூச்சுத் திணறல் இல்லாமல் வழக்கமான செயல்பாடுகளைச் செய்ய முடியும்.

என்ன செய்வது?

குறைவான பாதிப்பு நோயறிகுறிகள் இருந்தால், மருத்துவக் கவனிப்பு தேவைப்பட வாய்ப்பில்லை. தனிமைப்படுத்திக்கொண்டாலே போதுமானது.ஆரோக்கியமான உணவு, நிறைய தண்ணீர் குடித்தல் போன்றவையே போதுமானது.

நல்ல ஓய்வு தேவை

symptoms of corona in tamil

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் (ஒரு நாளைக்கு 2 - 2.5 லிட்டர் )

வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால், 'காஸ்ட்ரோலைட்' (Gastrolyte) மற்றும் 'ஹைட்ராலைட்' (Gastrolyte) போன்ற வாய்வழி நீரேற்றல் திரவங்களை (rehydration fluids) குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

அசௌகரியமாக உணர்ந்தால், பாராசிட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரூஃபன் (ibuprofen) போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் இபுப்ரூஃபனை (ibuprofen) எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், இந்த மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்பெற்று உட்கொள்ளவேண்டும்.

பாதிப்பு கடுமையாக இருந்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

Updated On: 27 Aug 2022 8:33 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Happy Birthday Anni Quotes In Tamil பிறந்த நாள் நம் வாழ்வினை ...
 2. லைஃப்ஸ்டைல்
  Plant Based Diet in Tamil- இதய நோயாளிகளை பாதுகாக்க உதவும் தாவர...
 3. ஈரோடு
  ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் நாளை 57வது ஆண்டு விளையாட்டு விழா
 4. அரசியல்
  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பிரதமர்
 5. கோயம்புத்தூர்
  கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
 6. உசிலம்பட்டி
  பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
 7. வீடியோ
  Modi செய்த செயல் அதிர்ச்சியடைந்த Annamalai !#annamalai #annamalaiips...
 8. ஈரோடு
  கோபி அருகே இளம் வயது திருமண எதிர்ப்பு, கோடை வெப்பம் விழிப்புணர்வு...
 9. ஈரோடு
  ஸ்டாலின் முதல்வரானது ஒரு அரசியல் விபத்து: முன்னாள் அமைச்சர் கருப்பணன்...
 10. திருவள்ளூர்
  சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் சேலையில் தீ