Sweet Potato Benefits in Tamil-உடலை சர்வீஸ் பண்ணனுமா? சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுங்க..!
sweet potato benefits in tamil-சர்க்கரைவள்ளி கிழங்கு (கோப்பு படம்)
Sweet Potato Benefits in Tamil
குளிர்காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்கும் பலரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிடுவது மிகவும் நல்லது. மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஒரு சாகா வரம்தரும் கிழங்கு என்கிறார்கள் அறிந்தவர்கள்.
Sweet Potato Benefits in Tamil
தினமும் காலை தொடங்கி மதியம் இரவு என்று மூன்று வேளையும் சாப்பிடுகிறோம். நாம் உண்ணும் உணவு கலப்படமானதா? சுகாதாரமானதா? ஆரோக்யமானதா? என்று எல்லாம் நாம் யோசிப்பதில்லை. ஆனாலும் பசி ஏற்படும்போது நமக்கு எதுவும் தெரியாமலேயே ஏதோ ஒரு உணவை சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.
அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நச்சுப்பொருள்.
அத்தகைய நஞ்சு நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் அந்த Free Radicals. புரியுதுங்களா எவ்வளவு மோசமானதா இருக்கும்னு.
Sweet Potato Benefits in Tamil
நமது உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி உணவின் மூலமாகத்தான் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் சக்தியை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவு நச்சாக இருக்கும் free radicals எனப்படும் கழிவுப்பொருட்கள்.
எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு நமது உடலை சர்வீஸ் செய்து கழிவுகளை வெளியேற்றுகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது. அப்போ நமது உடல் சர்வீஸ் பண்ணணும்கிறது எவ்வளவு முக்கியம்னு தெரியுதா?
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தால் சீசனில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது இனிப்பாக இருக்கும் என்பதால், சக்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் பலரும் இதை சாப்பிட அஞ்சுகின்றனர். வானிலை மாறும்போது, நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது அவசியம்.
Sweet Potato Benefits in Tamil
ஊட்டச்சத்து
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சத்துகள் அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. இந்த கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. எனவே வளரும் இளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இக்கிழங்கை சாப்பிடுவதால் உடலில் சத்து தேவைகள் பூர்த்தியாகும்.
கொழுப்பில்லா கிழங்கு
இக்காலத்தில் கொழுப்பு பிரச்னை ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். கிழங்கு வகை உணவுகள் என்றாலே அதில் சிறிதளவாவது கொழுப்பு இருக்கும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொழுப்பு பிரச்னை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.
Sweet Potato Benefits in Tamil
உள்காயம், புண்கள்
நமது உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்களை நாம் மருந்து தடவி சரி செய்து விட முடியும். ஆனால் அடிபடும் போது சமயத்தில் நமது உள்ளுறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அப்படிப்பட்டவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆகியவை உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் உங்களை விரைவில் குணப்படுத்துகின்றன.
கருவுறுதல்
உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும் திருமணமான பெண்களுக்கு சுலபமாக கருவுற முடிகிறது. ஆனால் சில பெண்களுக்கு உடலில் ஏற்படும் சத்துக் குறைபாட்டால் கருவுறுவது தாமதமாகிறது. இப்படிப்பட்ட பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதோடு சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஃபோலேட் எனப்படும் சத்து விரைவில் பெண்களுக்கு கரு உருவாதலை உறுதி செய்கிறது.
Sweet Potato Benefits in Tamil
நுரையீரல்
நாம் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் நாம் சுவாசிக்கும் மூச்சு தான். அந்த மூச்சு சீராக இருக்க நமது நுரையீரல் ஆரோக்யமாக இருப்பது அவசியம் ஆகும். ஒரு சிலருக்கு நுரையீரல் காற்றுப் பையில் ஏற்படும் பிரச்னை காரணமாக எம்பஸீமா எனப்படும் நோய் ஏற்படுகிறது. இந்த நோய் சீராக சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுத்தும். இந்த நோய் ஏற்பட்டவர்கள் அடிக்கடி சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வருவதன் மூலம், இந்த நோய் குறைபாடு தீர்ந்து மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களை போக்குகிறது.
அல்சர் பிரச்னைகள்
நாம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் உணவை செரிக்கும் உறுப்புகளான வயிறு மற்றும் குடல்களின் ஆரோக்யம் மிகவும் முக்கியமானதாகும். அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது.
இளமையான தோற்றம்
இளமையான தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமையான தோற்றம் இருக்குமாறு செய்கிறது.
Sweet Potato Benefits in Tamil
நோய் எதிர்ப்பு சக்தி
நோய்கள் ஏற்பட்ட பிறகு அவற்றிற்கான மருந்துகள் சாப்பிட்டு அதை நீக்குவதை விட நோயே வராமல் தடுப்பதுதான் சிறந்தது. இதற்கு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலமாக இருக்க வேண்டும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும்.
மலச்சிக்கல்
ஒரு சில வகை கிழங்குகளை சாப்பிடுவதால் சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏற்படலாம். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களின் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் புண்கள், நச்சுக்களை போக்கி, உங்களுக்கு மலச்சிக்கல், மூலம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே வாரம் ஒருமுறையாவது சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது சிறந்தது.
Sweet Potato Benefits in Tamil
தொண்டைப் புற்று
புற்று நோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் புகையிலை சார்ந்த பொருட்களை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இத்தகைய புற்று நோய் ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நிறைந்து இருக்கும் சத்துகள் புற்றுநோய் செல்களை மேலும் மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu