சர்க்கரை நோய் அறிகுறிகள் என்ன..? அதை தடுக்க முடியுமா..? பார்க்கலாம் வாங்க..!

Sakkarai Noyin Arikurigal
X

Sakkarai Noyin Arikurigal

Sakkarai Noyin Arikurigal-சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றழைக்கப்படும் இது தற்போது உலக பொது நோயாக மாறிவிட்டது.

Sakkarai Noyin Arikurigal-உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து அதில் சில அறிகுறிகள் இருந்தால் அது சர்க்கரை நோயாகக்கூட இருக்கலாம். சர்க்கரை நோய் தற்போதைய காலகட்டத்தில் சிறு வயதினரைக் கூட விட்டுவைக்கவில்லை. அதற்கு நமது உணவுப்பழக்கங்களே காரணம்.

சர்க்கரைநோய் மற்றும் ரத்த அழுத்தத்தை உடன்பிறந்த இரட்டைச் சகோதரிகள் என்பார்கள். ஆமாம். சர்க்கரை வந்தால் ரத்த அழுத்தமும் உடன் வந்துவிடும். அதேபோலவே ரத்த அழுத்தம் இருந்தால் சர்க்கரை நோயும் வந்துவிடும் என்பார்கள். ஆக.சர்க்கரை உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவரும் சாளரம்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு பாதிப்பு ஏதோ வரப்போகிறது என்பதற்கான கடிதம் என்பதை உணரவேண்டும். ஆகவே உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.

அப்படித் தான் சர்க்கரை நோயும். சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுப்பிடித்தால் போதும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி அதை உடனே கண்டறிவது. அதன்மூலம் தக்க தடுப்பு முறைகளை மேற்கொண்டால் தடுத்துவிடலாம்.

சர்க்கரை நோயின் சில அறிகுறிகள்

சர்க்கரை அல்லது நீரிழிவு நோய் வருவதற்கு முன்பு உடலில் பல வகையான ஆரம்ப அறிகுறிகள் தென்படும். அவைகளை பார்ப்போம் வாங்க.

இன்றைய நவீன உலகில், நீரிழிவு நோய் என்பது உலகளாவிய நோயாக மாறிவிட்டது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும் போது இது கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. இது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்துகிறது. நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் போன்ற பல நோய்களை ஏற்படுத்தக் கூடியது.

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கூட கர்ப்ப கால நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மன அழுத்தம், நீரிழிவு நோயுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை அறிந்துகொள்வது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு என்பது நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாகும். குறிப்பாக, இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், நம் நாட்டில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வதில்லை. ஏனெனில் அதற்கான விழிப்புணர்வு மிகவும் குறைவு. நீரிழிவு நோய் வருவதற்கு முன்பு, சில ஆரம்ப அறிகுறிகள் நிச்சயமாக தென்படும்.

அதன் அறிகுறிகள் :

நீரிழிவு நோய் யார் யாருக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகம்?

  • முந்தைய தலைமுறையில் நீரிழிவு நோய் இருந்தவர்களுக்கு
  • அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவை உண்பவர்கள்
  • டிரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள், குறைந்த எச்.டி.எல். உடையவர்கள்
  • நீரிழிவு நோயின் முந்தைய கட்டத்தில் இருப்பவர்களுக்கு டி2டிஎம் டைப்-2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

sugar symptoms in tamil-அப்படி வந்து விட்டால், நீரிழிவு நோயின் முன் அறிகுறிகள் என்ன?

1. சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுமாயின் சர்க்கரை நோயாக இருக்கக்கூடும்.

2. சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு தோன்றுவது வழக்கம்.

3. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும்.

4. சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.

5. எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான்.

6. மங்கும் பார்வைத்திறன், எடை கூடுதல் அல்லது குறைதல், தோல் அரிப்பு, சிறுநீர்த் தொற்று, நீர்ச் சமநிலைக் குறைபாடு போன்றவை ஏற்படும்.

7. அடிக்கடி உடற்சோர்வு:

சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து அதற்கு தேவைப்படும் சக்தியைப் பெற முடியாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடற்சோர்வு, அசதி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

8. புண்கள் சீக்கிரம் குணமடையாது:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டால் அது குணமாவதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.

9. ஈறுகளில் வீக்கம்:

சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்னைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

(நீரிழிவு நோய் (Type -1) வகை 1-ல் கணையம் இன்சுலினை சுரக்காது. (Type -2)வகை 2 -ல், கணையம் போதுமான அளவு இன்சுலினை சுரக்காது. மேலும் அது உருவாக்கும் இன்சுலின் எப்போதும் வேலை செய்யாது. இரண்டு வகைகளும் நீரிழிவு நோயின் வடிவங்கள்.)


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!