கோடை காலத்தில் இதெல்லாம் தவிர்ப்பது நல்லது..! ஏன்..?

கோடை காலத்தில் இதெல்லாம் தவிர்ப்பது நல்லது..! ஏன்..?
X
கோடை காலத்தில் குடல் ஆரோக்கியம் பேணப்படுவது அவசியம். அதனால் எந்த மசாலாப் பொருட்களை சேர்க்கலாம், எவற்றை தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Spices to Avoid During Summer in Tamil, Spices to Avoid During Summer, Spices for Summer, Good Spices for Summer, Unhealthy Spices for Summer Season. Ginger, Spices to Restrict in Warmer Temperat, Asafoetida, Hing

கோடை காலம் வந்துவிட்டது என்றாலே வெப்பம், வியர்வை, சோர்வு போன்றவை நம்மை சூழ்ந்து கொள்ளும். உடலைக் குளிர்ச்சியாக வைக்கவும், நீர்ச்சத்துடன் இருக்கவும் நாம் பல்வேறு முயற்சிகளை எடுப்போம். ஆனால், எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருட்கள் உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்து குடலின் செயல்பாட்டை பாதிக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, சில மசாலாப் பொருட்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன.

Spices to Avoid During Summer in Tamil,

கோடையில் எந்த மசாலாப் பொருட்களை உணவில் அதிகம் சேர்க்கலாம்?

இஞ்சி: இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் (Gingerol) என்ற வேதிப்பொருள், செரிமானத்தை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இது குமட்டல், வயிற்று வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. இஞ்சியைத் தேநீரில் சேர்த்தோ, உணவில் சேர்த்தோ சாப்பிடலாம்.

பெருஞ்சீரகம் (சோம்பு): செரிமான நொதிகளைத் தூண்டி, வயிறு உப்புசம், வாயுத் தொல்லை ஆகியவற்றைப் போக்குவதில் சோம்பு சிறந்து விளங்குகிறது. உணவுக்குப் பின்னர் சில சோம்பு விரிகளை மென்று சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவும்.

Spices to Avoid During Summer in Tamil,

மஞ்சள்: மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இது குடல் சுவரை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும், செரிமான அமைப்பில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்கிறது. தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியமானது.

கொத்தமல்லி: உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லியில், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் இலைகள் மட்டுமல்லாமல், விதைகளும் நம் உடலுக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன. கொத்தமல்லி விதைகளை நீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குடிப்பதன் மூலம் செரிமானம் சீராகும்.

Spices to Avoid During Summer in Tamil,

புதினா: கோடையில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளுக்கு புதினா சிறந்த இயற்கை மருந்து. புத்துணர்ச்சி தரும் புதினாவை நீரில் சேர்த்து அருந்துவதாலோ, சட்னியாகவோ, உணவுகளில் சேர்த்தோ சாப்பிடுவதன் மூலமோ அதன் பலன்களை அடையலாம்.

கோடையில் எந்தெந்த மசாலாப் பொருட்களை தவிர்க்க வேண்டும் (அ) குறைவாக சாப்பிட வேண்டும்?

மிளகாய்: மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்ற வேதிப்பொருள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு மிளகாய் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை ஆகியவற்றையும் மிளகாய் தூண்டிவிடும்.

கரம் மசாலா: கரம் மசாலா பொடியில் மிளகு, சீரகம், இலவங்கம், ஏலக்காய் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே, கோடையில் இதனை அதிகம் உணவில் சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Spices to Avoid During Summer in Tamil,

பட்டை: அதிக அளவு பட்டையை உட்கொள்வது உடல் சூட்டை ஏற்றுவதோடு, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். கோடையில் பட்டையின் அளவைக் குறைப்பது நல்லது.

கடுகு: கடுகில் இருக்கும் இயற்கையான எண்ணெய்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும், இதில் சக்திவாய்ந்த வெப்பமூட்டும் தன்மை உள்ளதால், இது வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும்.

பெருங்காயம் :இந்திய சமையலில் பெருங்காயம் ஒரு பொதுவான மூலப்பொருள். இந்த மசாலா பொருள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த சிறந்தது. இருப்பினும், பித்த (நெருப்பு) தோஷ ஆதிக்கம் உள்ளவர்கள் அல்லது இரத்த வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் வெப்பமான மாதங்களில் இதை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

Spices to Avoid During Summer in Tamil,

மற்ற முக்கியக் குறிப்புகள்:

  • அதிக காரம், அதிக மசாலா சேர்த்துக் கொள்ளாமல், எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்வு செய்யுங்கள்.
  • உணவில் தயிர், மோர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.
  • உணவை நன்கு மென்று, நிதானமாக சாப்பிடுங்கள். விரைவாக சாப்பிடும்போது, செரிமான மண்டலத்தின் மீது சுமை அதிகரிக்கும்.
  • எப்போதும் போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள். நீர்ச்சத்து இல்லாத நிலையில், செரிமானப் பிரச்சனைகள் உண்டாகலாம்.

Spices to Avoid During Summer in Tamil,

முன்னெச்சரிக்கை

இந்த கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவானவையே. ஏற்கனவே உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் அல்லது குடல் நோய்கள் இருந்தால், உங்கள் உணவு முறையில் எந்த மாற்றங்களைச் செய்தாலும், மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

ஆரோக்கியமே நமது செல்வம்!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!