Soya Beans in Tamil-கர்ப்பிணி பெண்களுக்கு சோயாபீன்ஸ் நல்லதா?

soya beans in tamil-சோயா அவரை (கோப்பு படம்)
Soya Beans in Tamil
இந்த சோயா பீன்ஸ் என்பதை சோயா அவரை என்றும் அழைப்பார்கள். புரதம் நிறைந்த சோயா அவரையே இதை அரைத்து எண்ணெய் எடுத்த பின்னர் கிடைக்கும் அந்த புண்ணாக்கு மீல் மேக்கர் என்றும் கூறுவார்கள்.அதிலும் புரதம் நிறைந்து உள்ளது.
ஆண்டு முழுவதும் விளைவதால் இதனை ஆண்டுத் தாவரம் என அழைக்கப்படுகிறது. இந்த சோயாவின் மத்திய நிலையம் சீனா என்றாலும் இது வேறு நாடுகளிலும் பயிரிடப்படுகிறது.
சோயா சீனாவிலேயே பெரிய அவரை ஆகும். இந்த சோயா அவரை சீனாவின் உணவாகும் அங்குள்ள மருந்துகளிலும் 5,000 ஆண்டுகளுக்கு மேலாகப பயன்பட்டு வருகின்றது.
Soya Beans in Tamil
நீண்டகாலப் பயிரிட்டு வளர்க்கும் பிற தாவரங்களைப் போலவே தற்கால சோயாத் தாவரத்துக்கும், தானாகக் காட்டில் வளரும் சோயாத் தாவரத்துக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிரிட்டு வளர்க்கும் சோயா இனங்கள் பல வகைகளில் உள்ளன.
கிளைசின் வைல்ட் என்பது தாவர பேரினம் ஆகும். அதில் கிளைசீன், சோஜா என்று இரண்டு துணை பேரினங்கள் உள்ளன. சோஜா என்பதில் பயிரிடப்படும் சோயா, காட்டுச் சோயா என்ற இரண்டு வகைகள் உள்ளன.
சோயா மனிதனுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதனால், இது புரதச் சத்துக்கான சிறந்த மூலப்பொருளாக உள்ளது. பால் பொருட்களுக்கு மாற்று உணவுப்பொருளாக இந்த சோயா உள்ளது.
Soya Beans in Tamil
சோயாபீன்ஸின் ஊட்டச்சத்து மதிப்பு
சோயாபீன்ஸில் உள்ள முக்கிய கூறு புரதம் ஆகும். இதில் பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம். 100 கிராம் வேக வைத்த சோயாபீன்ஸில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது:
இதன் முக்கிய கூறான புரதம் 18.2 கிராம் உள்ளது. உலர்ந்த எடையில் காணப்படும் புரத அளவு 36 முதல் 56% ஆகும்.
8.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, சர்க்கரை அளவு கடுமையாக அதிகரித்து விடுமோ என்ற பயம் தேவையில்லை.
9 கிராம் கொழுப்பு காணப்படுகிறது. இது 1.3 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 1.98 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 5.06 கிராம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு என பிரிக்கலாம். லினோலிக் அமிலம் சோயாபீன்ஸ்களில் காணப்படும் முக்கிய கொழுப்பு ஆகும்.
6 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன.
3 கிராம் சர்க்கரை உள்ளது.
இது ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். அரை கப் சோயாபீன்ஸில் 510 மில்லிகிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது.
மேற்கூறிய ஊட்டச்சத்துக்களைத் தவிர, இதில் மாங்கனீஸ், தாமிரம், ஃபோலேட், தியாமின், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே1 போன்ற பல்வேறு வகையான கனிமங்களும் உள்ளன.
100 கிராம் சோயாபீன்ஸில் 172 கலோரிகள் உள்ளன.
Soya Beans in Tamil
கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதா?
ஆம், அளவாக எடுத்துக்கொள்ளும்போது கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. சோயாபீன்ஸ் பல வடிவங்களில் கிடைக்கிறது. அவற்றில் சோயா சங்ஸ் உட்பட, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் மற்றும் தீமைகள் காணப்படுகின்றன.
சோயா சங்ஸ் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லதா?
கர்ப்ப காலத்தில் சோயா சங்ஸ் புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. ஆனால், இதில் அதிக அளவு ஐசோஃபிளேவோன்ஸ் உள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிகரிக்க உதவும். எனவே, கர்ப்ப காலத்தில் அதிக அளவில் சோயா சங்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. டோஃபு சங்ஸை விட அதிக அளவு ஆன்டிஆக்சிடன்டுகளைக் கொண்டுள்ளது.
Soya Beans in Tamil
ஆனால், அதிக அளவு டோஃபு சாப்பிடுவது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். சோய் மில்கில் டோஃபு விட குறைந்த கலோரிகள் உள்ளன. ஆனால், அதிக அளவில் சோயா பால் குடிப்பது செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நன்றாக சமைக்கப்பட்ட சோயாபீன்ஸை மிதமான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது.
கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவதன் நன்மைகள்
கர்ப்ப காலத்தில் சோயாபீன்ஸ் சாப்பிடுவது ஏராளமான நன்மைகளை வழங்கும்.
இது புரதத்தின் சிறந்த மூலம் என்பதால், மூளை உட்பட குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. அது மட்டும் இல்லாமல், இது குழந்தைக்கு தேவையான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்கிறது.
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை மற்றும் விழித்திரையின் கட்டுமானத் தொகுதிகளாக செயல்படுவதால் அவை முக்கியமானதாக கருதப்படுகின்றன. மேலும் இது கருவுறுதல் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தையும் தடுக்க உதவுகிறது.
Soya Beans in Tamil
நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
சோயாபீன்ஸ்களில் உள்ள தாதுக்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது மற்றும் கருவுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றல் அளவை அதிகரிக்கின்றன.
ஃபோலேட் மற்றும் துத்தநாகம் குழந்தையில் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
Soya Beans in Tamil
கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு சோயாபீன்ஸ் உட்கொள்ளலாம்?
கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு சோயாபீன்ஸ் உட்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ வரம்புகளும் இல்லை. எனினும், கர்ப்ப காலத்தில் ஒரு கப் சோயா பால் அல்லது அரை கப் டோஃபு அல்லது அரை கப் சோயா சங்ஸ் அல்லது அரை கப் முழு சோயாபீன்ஸ் உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக சாப்பிடுவது, மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, கர்ப்ப காலத்தில் எவ்வளவு சோயாபீன்ஸ் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu