Soya Beans in Tamil-சோயா அவரை எல்லோரும் சாப்பிடலாமா?

Soya Beans in Tamil-சோயா அவரை எல்லோரும் சாப்பிடலாமா?
X

soya beans in tamil-சோயா அவரை (கோப்பு படம்)

சோயா பீன்ஸ் என்பது சோயா அவரை என்று நாம் தமிழில் கூறுகிறோம். பொதுவாகவே சோயா அவரையில் புரதம் செறிந்து உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் வாங்க.

Soya Beans in Tamil

சோயா பீன்ஸ் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றில் 100 கிராமுக்கு 20 முதல் 25 கிராம் அளவு புரதம் இருக்கிறது என்றால், சோயாவில் அது 40 சதவிகிதம் அளவிற்கு இருக்கிறது. ஆனால், அவை நாம் நினைப்பது போல் ஆரோக்கியமானதா? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

Soya Beans in Tamil

பொதுவாக சோயா பீன்ஸில் அதிக அளவு புரோட்டீன் இருப்பதால் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால் சைவம் மட்டும் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் பொதுவாக பெரிய அளவில் கிடைப்பதில்லை. புரோட்டீன்கள் பெரும்பாலும் அசைவ உணவில் தான் நிறைந்து காணப்படுகிறது. சிக்கன், மட்டன் முட்டை, பால் போன்ற உணவுகளிலேயே அதிக அளவு புரோட்டீன் இருக்கிறது.

சோயா பீன்ஸ் உணவில் அதிகளவில் நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. பெண்ணின் சாதாரண ஈஸ்ட்ரோஜன் அளவை விட ஆண்களின் அளவை எட்டு மடங்கு அதிகமாக உயர்த்துகிறது.

Soya Beans in Tamil

இதனால் ஆண்களின் மார்பு சதையை அதிகமாக்கிவிடுகிறது. மேலும் ஆண்களின் உடல் அமைப்பில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்திவிடும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகம் என்பதால், ஆண்கள் சோயா பீன்ஸை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஆய்வின்படி சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலிலுள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும். இதயத்துக்கும் நல்லது.

Soya Beans in Tamil

சோயா அவரை சுண்டல்

தினசரி புரோட்டீன் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சோயா பீன்ஸ் மசாலா சுண்டல் செய்தும் சாப்பிடலாம். சோயா பீன்ஸ் மசாலா சுண்டல் செய்வதற்கு என்னென்ன தேவை என்பது பற்றியும் எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கப்

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

தனியாத்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Soya Beans in Tamil

செய்முறை:

சோயா பீன்ஸை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கும்போது கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர், அதோடு வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். சோயாபீன்சில் மசாலா நன்கு கலந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் புதினா, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இப்போது சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.

சுவைத்து சாப்பிடுங்க. ஆரோக்கியமா இருங்க.

Tags

Next Story