தொண்டைப்புண் அவதியா..? கவலை வேண்டாம்..! இவைகளை செய்யுங்கள்..!

Throat Pain Reasons in Tamil
X

Throat Pain Reasons in Tamil

Throat Pain Reasons in Tamil-அடிக்கடி பலர் தொண்டையில் புண் ஏற்பட்டுவிட்டதாக கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். அது ஏன் வருகிறது? எப்படி தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.

Throat Pain Reasons in Tamil-சிலருக்கு தொண்டையில் வலி, கரகரப்பு, வீக்கம் போன்றவைகள் ஏற்படும். இவை எல்லாமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். ஆனால், இது தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஒருவித அழற்சியாகும்.

சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பெரும்பாலும் சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளே தொண்டைப் புண் ஏற்பட காரணியாக இருக்கிறது. சமயத்தில் பாக்டீரியா கிருமிகளாலும் தொண்டை அழற்சி ஏற்படலாம்.

பாக்டீரியா-வைரஸ் கிருமிகள்

தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணமாக இருக்கின்றன. அதேபோல வைரஸ் வரிசையில் அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது தொண்டைப்புண் அல்லது உள்நாக்கு அழற்சி இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் அது தொற்றும். அதனால், டம்ளர் உட்பட சில பொருட்களை ஒருவர், மற்றவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

குழந்தைகளுக்கு பரவும்

குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் பெரியவரிடமும் இது பரவலாகக் காணப்படும்.

எதனால் வருகிறது ?

தொண்டைப் புண் அல்லது வலி எதனால் உண்டாகிறது என்பதைப்பொறுத்து அதன் அறிகுறிகளும் மாறுபடலாம். அவையாவன :

  • வலி அல்லது அரிப்பு போன்ற உணர்வு
  • உணவு விழுங்கும்போதும் பேசும்போதும் வலி
  • உலர்ந்த தொண்டை
  • கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள்
  • தொண்டைச் சதை வீக்கம்
  • தொண்டைச் சதையில் சீழ் அல்லது வெள்ளைப் புள்ளிகள்
  • குரல் கம்மிப்போதல்

வைரஸ் காரணமாக தொண்டைப் புண் உண்டானால் தானாக ஒரு வாரத்தில் குணமாகும். பாக்டீரியா காரணமாக இருந்தால் அதற்கு ஆன்டிபையாட்டிக் தேவைப்படும். ஓய்வும், நிறைய நீர் பருகுவதும் நல்லது. உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. கிருமிகளைக் கொல்லும் அல்லது சப்பக்கூடிய

மருந்துகளும், தொண்டை கொப்பளிக்கும் மருந்துகளும் பயன்படுத்தலாம். குறிப்பாக ஒவ்வாமை ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

தடுப்பது எப்படி

தொண்டைப் புண் ஏற்படுத்தும் கிருமிகள் எளிதில் தொற்றும் தன்மைகொண்டவை. தொண்டைப் புண் பரவலாக குழந்தைகளுக்கு எளிதில் வரலாம் என்பதால் அவர்களுக்கு சில அடிப்படை சுகாதாரமான பழக்கவழக்கங்களை அரியச் செய்வது அவசியமாகும்.

1. கைகளை நன்றாக கழுவவேண்டும் ​ குறிப்பாக கழிவறை சென்றபின், உணவு உண்ணும் முன், இருமிய அல்லது தும்மிய பின் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு பழக்கவேண்டும்.sore

2. அடுத்தவர் குடித்த டம்ளர் அல்லது கப் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

3. கண்டதையும் வாயில் வைத்து சப்பக்கூடாது.

4. பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைகாட்சி ரிமோட் போன்ற கைக்கருவிகளை கையில் எடுத்து விளையாடக்கூடாது. அதில்கூட கிருமிகள் இருக்கலாம். இந்த பொருட்களை முன்பு பயன்படுத்தியவருக்கு கிருமித் தொற்று இருந்தால் அந்த கிருமிகள் சிறுவர்களுக்கு எளிதில் தொற்றும்.

5. இருமும்போதும், தும்மும்போதும் சுகாதாரமான டிசு காகிதத்தைப் பயன்படுத்தி உடனே குப்பைத் தொட்டியில் போட்டுவிடவேண்டும்.

6. நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

7. காய்கறிகள் பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும். எதிர்ப்புச் சக்தி உடலில் இருந்தால் கிருமிகள் தொற்றைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil