snake gourd in tamil-புடலங்காயில் இவ்ளோ நன்மைகளா..? பெண்களே தெரிஞ்சிக்கங்க..!
snake gourd in tamil-புடலங்காய் ஒரு கொடி வகையைச் சேர்ந்த காயாகும். அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
HIGHLIGHTS

snake gourd in tamil-புடலங்காய் (கோப்பு படம்)
snake gourd in tamil-அது கெடக்கு புடலங்காய் என்று ஒதுக்கி வைத்துவிட்டு போகும் காய் அல்ல புடலங்காய். அதில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. அவைகளைத் தெரிந்துகொண்டால் புடலங்காயை ஒதுக்கமாட்டீர்கள். அத்தனையும் முத்து என்பதுபோல புடலங்காயில் அவ்வளவும் சத்து.
புடலங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவைகளுடன் புடலங்காயில் மிக அதிகமாக நீர்ச்சத்து இருக்கிறது.
இதன் நன்மைகள்
- ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
- மலேரியாவை நீக்கும்
- மஞ்சள் காமாலைக்கு தீர்வு செய்யும்
- இதய ஆரோக்கியம்
- மலச்சிக்கல் தீர்க்கும்
- உடல் எடையை நிர்வகிக்கும் தன்மை கொண்டது
- பொடுகைப் போக்கும்
- உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்
- பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியாக வைத்திருக்கும்.
- தலை முடி வேர்க்கால் சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தீர்க்கும்.
snake gourd in tamil
இரத்த சர்க்கரை
புடலங்காய் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். புடலங்காயில் மிகக் குறைவான கலோரிகள் உள்ளன. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்படும். அந்த பருமனைக் குறைக்கும் தன்மை புடலங்காய்க்கு உண்டு. சீன மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக புடலங்காய் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேரியா
புடலங்காயை நறுக்கியோ அல்லது சாறு பிழிந்தோ நன்றாக காய்ச்சி, காய்ச்சல் சமயங்களில் குடித்து வர காய்ச்சல், மலேரியா காய்ச்சல் கூட தீர்ந்து போகும். சிலருக்கு வெளியே தெரியாமல் உள் காய்ச்சல் இருக்கும். அதுகூட இந்த புடலங்காய் சாறு தீர்க்கும். வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
மஞ்சள் காமாலை
இலகுவாக ஜீரணமாகும் உணவுகளை மஞ்சள் காமாலை பாதித்தவர்கள் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இந்த புடலங்காய் சாற்றை குடித்து வந்தால், மஞ்சள் காமாலை மிக விரைவாக குணமடைந்து விடும்.
இதய ஆரோக்யம்
புடலங்காயின் சாறு இதயத்தினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்து, நரம்புகளையும் சீராக இயங்கச் செய்கிறது. இந்த புடலங்காய் சாறினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைந்து இதய ஆரோக்யம் மேம்படும். ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவு புடலங்காய் சாறு குடித்து வந்தால், இதயம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையும் ஏற்படாது.
snake gourd in tamil
மலச்சிக்கல்
உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் போனால் தான் மலச்சிக்கல் உண்டாகும். புடலங்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. அதனால் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தினமும் இரண்டு ஸ்பூன் புடலங்காய் சாறு குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் சீராகும்.
எடை குறைய
புடலங்காயில் மிகக்குறைந்த அளவு கலோரிகள் உள்ளதாலும் கொழுப்புச் சத்து இல்லாமல் இருப்பதாலும் உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதனால் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பொடுகை அகற்றும்
புடலங்காய் அதிகப்படியான பொடுகினைப் போக்கும் தன்மை கொண்டது. புடலங்காய் சாறு எடுத்து தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் வரை ஊற விட்டு மென்மையான ஷாம்பு போட்டு தலையை அலசினால் பொடுகுப் பிரச்னைகள் அத்தனையும் சரியாகிவிடும்.
நச்சுக்களை வெளியேற்றும்
உடலில் நச்சுக்கள், கழிவுகள் சேராமல் இருந்தால் தான் உடல் அதிக ஆரோக்யத்துடன் இருக்கும். உடலுக்குள் இருக்கும் அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர்ச்சத்து மிக மிக அவசியம். வெறுமனே எப்போதும் தண்ணீர் மட்டுமே குடித்தால் மட்டுமே போதாது என்பதால், புடலங்காயை சாறெடுத்து அதைக் குடித்து வரலாம்.
snake gourd in tamil
பற்களை வலிமையாக்கும்
புடலங்காயில் மிக அதிக அளவில் கால்சியம் நிறைந்திருப்பதால், பற்களையும் எலும்புகளையும் மிக வலிமையாக வைத்திருக்கும். கால்சியம், மினரல்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகள் மிக உறுதியாக இருக்கும்.