தொப்பையை குறைக்கணுமா..? ஸ்கிப்பிங் செய்ங்க..! அசந்து போவீங்க..!

skipping benefits in tamil-ஸ்கிப்பிங் செய்தல் (கோப்பு படம்)
Skipping Benefits in Tamil -பள்ளியில் படித்த காலங்களில் கயிறு ஒன்றை எடுத்துக்கொண்டு சுழட்டி விளையாடியது ஞாபகம் வரும். அன்று விளையாடிய இந்த ஸ்கிப்பிங் இன்று ஆரோக்ய விளையாட்டாக பல மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அன்று குழந்தைகள் விளையாடும்போது அம்மாவும் வந்து கயிறில் சுழன்று விளையாடுவார். அப்பாவும் இணைந்துகொள்வார். இப்படி வயது பாரபட்சமில்லாமல் விளையாடிய விளையாட்டை காலப்போக்கில் மறந்துபோனோம். பல நோய்கள் நம்மை தாண்டியவுடன் மீண்டும் ஆரோக்யம் தேடி மீண்டும் ஸ்கிப்பிங் என்கிறோம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எத்தனையோ வகையான உடற்பயிற்சிகள் இருந்தாலும் எளிமையான உடல்பயிற்சியாகவும், வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சியாகவும் இருப்பதுதான் இந்த ஸ்கிப்பிங். இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை புதிதாக தொடங்குபவர்களுக்கு ஆரம்ப காலத்தில் சில பிரச்சனைகள் வரும். அதாவது கால், தொடைப் பகுதி, உடம்பு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். ஸ்கிப்பிங் செய்வதற்காக தொடர்ந்து பயிற்சி எடுக்கும்போது நம்மை அறியாமலேயே அதன் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டு விடும்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிது நேரம் ஸ்கிப்பிங் செய்வது மிகவும் ஆரோக்யமானது. ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
எடை குறைய
எடையை குறைப்பதற்காக தேவையற்ற பல முயற்சிகளை மேற்கொள்வோம். சிலர் எடையைக் குறைப்பதற்காக மாத்திரை மருந்துகள் எல்லாம் சாப்பிடுவார்கள். இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் ஏற்படும். ஆனால் தொடர்ந்து ஸ்கிப்பிங் பயிற்சி எடுப்பதன் மூலம் எடை தானாகவே குறையும். அதுமட்டுமல்லாமல் சீரான வளர்ச்சியும், ஆரோக்கியமும், உடல் புத்துணர்ச்சியும் ஸ்கிப்பிங் மூலம் பெற முடியும்.
தொப்பை குறைய
ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையத் தொடங்கும். தொப்பை பிரச்சனையால் அவதிப்படும் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த ஸ்கிப்பிங் ஒரு நல்ல பயிற்சி.
உடல் சுறுசுறுப்பிற்கு
சிலருக்கு அன்றாடம் செய்யும் பணியில் ஈடுபாடு இல்லாமல் சோர்வாக செயல்படுவார்கள். இப்படி உள்ளவர்கள் தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் ஸ்கிப்பிங் செய்ய பழகிக்கொண்டால், மனக்கவலை நீங்கி, மன அழுத்தம் நீங்கி அன்றாட வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்யமுடியும்.
இதய ஆரோக்கியத்திற்கு
skipping benefits in tamil-ஸ்கிப்பிங் பயிற்சியானது நின்ற இடத்திலேயே சாதாரணமாக முதலில் தொடங்க வேண்டும். பின்பு குதிக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் படிய வைக்காமல் முன் பாதத்தை மட்டும் தரையில் வைத்து குதிக்க வேண்டும். இந்த பயிற்சியானது தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை செய்யலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் இதயம் ஆரோக்கியமாகும். உடலின் ரத்த ஓட்டம் சீர்படுத்தப் படுகிறது. இதன் மூலம் நம் இதயத்துடன் நுரையீரலும் ஆரோக்கியமாக செயல்படும்.
தசைகள் சக்தி உறுதியாகும்
ஸ்கிப்பிங் செய்யும்போது இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் வலது பக்கமும் இடது பக்கமும் மாற்றி மாற்றி வைத்து குதிக்க வேண்டும். இப்படி செய்யும்போது நம் முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி குதிக்கலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 10 நிமிடம் வரை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் மூட்டு வலி, கணுக்கால் வலி உள்ளவர்களுக்கு தசைகளானது வலுப்பெற்று அதிக அளவு சக்தியை பெறுகின்றது. கை கால் தொப்பை பகுதிகளில் உள்ள தசைகளும் ஆரோக்யமாகிறது. முதுகெலும்புகள் வலிமை வாய்ந்ததாக இருக்க ஸ்கிப்பிங் பயிற்சியானது உதவுகிறது.
சருமம் அழகுபெற
தினந்தோறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் பயிற்சி எடுத்து வந்தால் சருமம் அழகாக மாறிவிடும். இந்த உடல்பயிற்சியானது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது மட்டுமல்லாமல் நம் உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறவும் இந்த பயிற்சி உதவியாக இருக்கிறது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்து வந்தால் 8 நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் ஓடியதற்கு சமமாகும். இந்தப் ஸ்கிப்பிங் பயிற்சியினை முறையாக தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு வழிகாட்டியாக அமையும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu