sabja seeds in tamil-சப்ஜா விதையை லேசா நினைக்காதீங்க..! மருத்துவ குணங்கள் ஏராளம்..!

sabja seeds in tamil-சப்ஜா விதையை லேசா நினைக்காதீங்க..! மருத்துவ குணங்கள் ஏராளம்..!
X
sabja seeds in tamil-சப்ஜா விதை (கோப்பு படம்)
sabja seeds in tamil-சப்ஜா விதைகளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

sabja seeds in tamil-தமிழகத்தில் ஆயிரக்கணக்கான விதைகள், கொட்டைகள் சமையலிலும், மருத்துவ பயன்பாட்டிலும் உதவுகின்றன. நம் முன்னோர்கள் பல அரிய விதைகளை நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் குறிப்பாக கிராமங்களில் மருத்துவ வசதிகள் கிடையாது. அதைப்போன்ற கிராமப்பகுதிகளில் எல்லாம் மூலிகை செடிகளையும், விதைகளையும் கொண்டே தீராத வியாதியை குணப்படுத்தியுள்ளனர். இன்றும் கிராமப்புற மக்களின் வீடுகளில் நிறைய மூலிகை செடிகளையும், விதைகளும் இருப்பதை நாம் காண முடியும். மருத்துவத்துறை அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் 95 சதவிகித மூலிகை மற்றும் விதைகளை கொண்டே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


அந்த வகையில் சப்ஜா விதைகள் பல எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது. இந்த சப்ஜா விதைகள் மருத்துவ ரீதியாகவும், சமையல் ரீதியாகவும், அழகுக்கலை ரீதியாகவும் பயன்பாட்டிலுள்ளன. இதில் நாம் சப்ஜா விதையின் பயன்பாடுகளை பார்க்கலாம் வாங்க.

மலச்சிக்கல் தீர

சப்ஜா விதை மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் தினசரி இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு பிறகு நன்கு ஊறிய சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் மலச்சிக்கல் நோய் தீர்ந்து விடும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்க சிறந்த மருந்தாகிறது, சப்ஜா விதை.

sabja seeds in tamil


உடல் எடை குறைய

சப்ஜா விதையில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் உடல் எடை குறைவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மாதவிடாய் பிரச்சனைக்கு

சப்ஜா விதை பெண்களின் மாதவிடாய், வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊற வைத்த சப்ஜா விதையை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலிலோ அல்லது தேனிலோ கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

sabja seeds in tamil


தலைமுடி வளர்ச்சிக்கு

சப்ஜா விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடியின் வேர்களில் இருந்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் பொடுகு தொல்லையிருந்தும் விடுதலை அளிக்கிறது, இந்த சப்ஜா விதைகள்.

சீரான ரத்த அழுத்திற்கு

சப்ஜா விதையில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. தினசரி ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை தண்ணிரில் ஊற வைத்து அதை பாலில் கலந்து பருகினால் ரத்த அழுத்தம் சீரான முறையில் இயங்கும்.


சர்க்கரை நோய்க்கு

உலகத்தில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். முதல் நாள் இரவில் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சர்க்கரை நோயாளிகள் ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை காணமுடியும்.

sabja seeds in tamil

உடல் உஷ்ணத்திற்கு

கோடை காலத்தில் மக்கள் உடல் சூடு, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலில் மிகவும் துன்புறுவர். அதற்கு சப்ஜா விதைகள் பெரிதும் பாதுகாப்பு அளிக்கின்றன.

சளி, இருமல் தடுக்கும்

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து சப்ஜா விதை பாதுகாக்கிறது. சுடுநீரில் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதையை கலந்து பருகினால் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுதலை பெறலாம்.

sabja seeds in tamil


கண் குறைபாட்டிற்கு

சப்ஜா விதையில் பீட்டா கரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. சப்ஜா விதையை தினசரி பயன்படுத்தினால் கண் தொடர்பான பிரச்னை நீங்கும்.

இதய நோய்க்கு சப்ஜா விதைகள்

இதய நோயை சரிசெய்வதில் சப்ஜா விதை பெரும் பங்கு வகிக்கிறது. சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர் போன்றவை அதிகளவு இருப்பதால் இதய தமனியை காக்க உதவுகிறது.

மன அழுத்த நீங்க

சப்ஜா விதை இன்றைய காலத்தில் மக்களை அதிகமாக தாக்குவது மன அழுத்த நோய். இந்த மன அழுத்த நோயை குணப்படுத்தும் ஆற்றல் சப்ஜா விதைக்கு உள்ளது.

sabja seeds in tamil

எலும்பு வலுப்பட

சப்ஜா விதையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், காப்பர், இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. சப்ஜா விதையை தினசரி பயன்படுத்தினால் எலும்பு வலிமைக்கு உதவுகிறது.


ஆண்மை குறைபாடு நீங்க

சப்ஜா விதைகள் ஆண்மை‌ குறைவுள்ளவர்கள் சப்ஜா விதைகளை ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து தினசிரி‌ பருகினால் ஆண்மை குறைவு தீரும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

சப்ஜா விதையில் வைட்டமின் ஏ, பி, சி, சல்பர், காப்பர் போன்றவை அதிகளவு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வலிமைக்கும் சப்ஜா விதைகள் பயன்படுகிறது.

sabja seeds in tamil

இரத்த சோகை பிரச்சனைக்கு

சப்ஜா விதையில் புரதம், நார்ச்சத்து, துத்தநாகம் அதிகம் இருப்பதால் இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் சப்ஜா விதைகளில் காணப்படுகின்றன.


சப்ஜா விதையின் அழகுக் குறிப்புகள்

பெண்களின் அழகுக்கு சப்ஜா விதை முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை பாலில் கலந்து பெண்கள் பருகினால் ஊளைச்சதை, தேவையற்ற கொழுப்புகள் போன்றவை வெளியேறும்.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்க

சப்ஜா விதையை மிக்ஸியில் சுத்தமான ரோஸ் வாட்டர் கலந்து அரைத்து பஞ்சில் நனைத்து பூசி வர கருவளையம் மறையத் தொடங்கும். மேலும் இந்த சப்ஜா விதை தினசரி உட்கொண்டால் முகத்தில் உள்ள வயதான தோற்றம் நீங்கி இளமைப் பொலிவு உண்டாகும்.

வெயில் காலத்திற்கு சப்ஜா விதை ஃபலூடா

தேவையான பொருட்கள்

சப்ஜா விதை – 1 தேக்கரண்டி, பால் – ஒரு டம்ளர், சேமியா – சிறிதளவு, ஐஸ்கிரீம் – 2 க்யூப், பாதாம், வால்நாட், முந்திரி – தேவையான அளவு, சர்க்கரை – தேவையான அளவு, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, நாவல் பழம் – சிறிதளவு


செய்முறை

சப்ஜா விதைகளை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். அதுவே மறுநாள் காலையில் 3 அல்லது 4 தேக்கரண்டி அளவு ‌வந்துவிடும். மேற்கூறிய பழங்கள் அத்தனையும் தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். சேமியாவை வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு டம்ளரில் சப்ஜா விதை ஒரு தேக்கரண்டி போட்டு அதன் மேல் சேமியா சேர்க்கவும். ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, மாதுளம் ஜூஸ் விட்டு அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும்.

பின்னர் மறுபடியும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதைகளை சேர்க்க வேண்டும். பின்பு மீண்டும் சேமியாவை சேர்க்க வேண்டும். பிறகு ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் சேர்த்து நாவல் பழம், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் கலக்கவும். அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும். இறுதியில் சர்க்கரை கலந்த பாலை ஊற்றி நன்றாக கலக்கவும். பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து அனைவருக்கும் பரிமாறவும். சுவையாகவும் இருக்கும். உஷ்ணத்தை குறைக்கவும் செய்யும்.

Tags

Next Story