Red Banana Benefits in Tamil-செவ்வாழை பழத்தில் இவ்ளோ இருக்கா?

Red Banana Benefits in Tamil-செவ்வாழை பழத்தில் இவ்ளோ இருக்கா?
X

red banana benefits in tamil-செவ்வாழை (கோப்பு படம்)

வாழைப்பழம் உடலுக்கு வலிமை தருவதுடன் உடல் ஆரோக்யத்தை பேணுகிறது. மஞ்சள்நிற வாழைப்பழத்தை விட செவ்வாழை சக்தி மிகுந்தது.

Red Banana Benefits in Tamil

பொதுவாகவே யாரும் உடல்நலம் குன்றி இருந்தால் நாம் வாங்கிச் செல்வது ஆப்பிள். அது ஏதோ பாரம்பர்ய சடங்கு போல ஆகிவிட்டது. ஆனால் ஆப்பிளை விட எவ்வளவோ நன்மை பயக்கும் பழங்கள் உள்ளன. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது கொய்யா பழத்தில் அவ்வளவு சத்து உள்ளன. ஆனால் கொய்யாவை யாரும் மதிப்பதில்லை.


ஆப்பிள் விலை அதிகம். ஆனால் கொய்யா விலை குறைவு. விலை குறைவு என்பதால் அதற்கான மரியாதையும் குறைந்து போனதுபோல. காஸ்ட்லீ பழத்துக்கு ராஜமரியாதை. நல்லதை யார்தான் மதிக்கிறார்கள்?

Red Banana Benefits in Tamil

சரி இன்று இந்த கட்டுரையில் நாம் செவ்வாழை பழம் குறித்து பார்ப்போம். ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வாழைப்பழம் தினமும் சாப்பிட்டால் ஆரோக்யத்திற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எல்லா சீசனிலும் , எங்கும் எளிதில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். தவிர விலை மலிவான பழம் என்றாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

பசியில் இருப்பவர்கள் வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் பசியே அடங்கிப்போகும். இதனால் உடல் வலிமையும் பெரும். அதனால் தான் விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் எப்போதும் வாழைப்பழத்தை அவர்களின் தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்கிறார்கள். அதோடு விரதம் இருப்பவர்கள் கூட பாலும் , வாழைப்பழம் சாப்பிடுவது வழக்கம்.

Red Banana Benefits in Tamil

இப்படி பல்வேறு நன்மைகள் தருகிற வாழைப்பழத்தில் பல ரகங்கள் உள்ளன. மலை வாழைப்பழம், கற்பூர வள்ளி, பூவாழை, ரஸ்தாளி, நாட்டு வாழைப்பழம் என்று இதன் வகைகள் நிறைய உள்ளன. அந்த வகையில் வாழைப்பழத்தில் ஒரு வகையான செவ்வாழை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.


செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

செவ்வாழையில் பொட்டாசியம், மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைநதுள்ளன.

Red Banana Benefits in Tamil

எடையைக் குறைக்கும் :

பொதுவாக எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆகையால் உடல் எடையை குறியாக எண்ணுபவர்கள் இந்த செவ்வாழையை தினமும் சாப்பிடலாம். இதனை சாப்பிடுவதால் வயிரு நிறைந்து இருப்பதால் பசி எடுக்காது அதே நேரத்தில் உடல் வலிமையுடன் இருக்கும்.

சிறுநீரக கற்களைத் தடுக்கும்:

செவ்வாழையில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுக்கும். அதோடு இதய நோய் மற்றும் புற்றுநோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தவிர உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்க செய்து எலும்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.

Red Banana Benefits in Tamil

இரத்த அளவை அதிகரிக்கும் :

உடலில் ஹீமோகுளோபினின் அளவு குறித்து காணப்படும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். செவ்வாழையில் காணப்படும் அதிக அளவிலான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிப்பதால் உடலுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

உடலின் சக்தி அதிகரிக்கும்:

செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி புரியும். செவ்வாழையில் இருக்கும் இயற்கை சர்க்கரை, ஆற்றலாக மாறி உடல் களைப்பை /சோர்வை தடுத்து உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது. ஆகவே எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடலாம்.

நெஞ்செரிச்சல்:

சாப்பிட்டவுடன் பலருக்கும் நெஞ்செரிச்சல் ஏற்படும். அதனை தவிர்க்க தினமும் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் இயற்கையாக இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் நெஞ்செரிச்சலை தடுக்கிறது.

Red Banana Benefits in Tamil


ஆரோக்யமான விந்தணுக்கள் பெற:

செவ்வாழை ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. செவ்வாழையில் இருக்கும் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் தவிர இதில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஆரோக்கியமான விந்தணுவை கொடுக்கும். இதிலுள்ள வைட்டமின் ஏ , வைட்டமின் பி 1 மற்றும் வைட்டமின் சி இருப்பதால் ஆண்களுக்கு தரமான விந்தணுவு உற்பத்தி பெருகும்.

மாலைக்கண்

மாலைக்கண்நோய் கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

பல்லுக்கு சிறந்தது

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

Red Banana Benefits in Tamil

சரும பிரச்னை

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி நேரத்திலோ, மாலை 4 மணி நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காது. இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!