சிறுநீரக பீன்ஸ் என்றால் என்னங்க..? அதில் என்ன சிறப்பு? தெரிஞ்சுக்கங்க..!

Rajma Benefits in Tamil
X

Rajma Benefits in Tamil

Rajma Benefits in Tamil-பீன்ஸ் சார்ந்த விதைகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் ராஜ்மா என்ற இந்த சிவப்பு பீன்சும் ஒன்றாகும். அதன் ஆரோக்ய நன்மைகளை பார்ப்போம் வாங்க.

Rajma Benefits in Tamil-ராஜ்மா விதை, சிவப்பு பீன்ஸ் அல்லது சிறுநீரக பீன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது வடிவத்தில் சிறுநீரகம் போல இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ராஜ்மா என்பது இந்தியாவில் பிரபலமான ஒரு பருப்பு வகை. இது நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

சிறுநீரக பீன்ஸின் ஆரோக்ய நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

சிறுநீரக பீன்ஸ் ஆரோக்ய நன்மைகள்:

ஊட்டச்சத்துகள் நிறைந்தவை

ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.

ஊட்டச்சத்து (வேக வைத்த பருப்பில் )

3.5 அவுன்ஸ் (100 கிராம் அளவு) சமைத்த ராஜ்மாவில் கீழ்காணும் சத்துக்கள் உள்ளன.

கலோரி: 127 கலோரி

வைட்டமின் 'சி': தினசரி தேவைக்குரிய மதிப்பில் 2%

நார்ச்சத்து: 7.4 கிராம் (29% DV)

புரதம்: 8.67 கிராம் (18% DV)

கொழுப்பு: 0.50 கிராம்

தண்ணீர்: 67%

இரும்புச்சத்து: 2.94 மிகி (16% DV)

கால்சியம்: 28 மிகி (3% DV)

பொட்டாசியம்: 403 மிகி (11% DV)

கார்போஹைட்ரேட்: 22.8 கிராம் (11% DV)

B வைட்டமின்கள்: 5% DV

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

ராஜ்மாவின் கிளைசெமிக் குறியீட்டு எண் (25) மிகக் குறைவு. எனவே, அவை உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக உயர்த்தாது. மேலும், ராஜ்மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உண்பது டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுவதை மருத்துவ ஆய்வு கூறுகிறது.

மேலும் மற்றொரு ஆய்வில், சிறுநீரக பீன்ஸ் சாப்பிடுவதால், அரிசியை விட குறைவான உணவுக்கு பிந்தைய இரத்த சர்க்கரை அளவைக் (post-meal blood sugar) காட்டியது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும்

அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச் (AICR) படி, உலர்ந்த பீன்ஸ், சிறுநீரக பீன்ஸ் மற்றும் கருப்பு பீன்ஸ் போன்றவை புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவக்கூடும் என தெரிய வந்துள்ளது.

ராஜ்மா உள்ளிட்ட அனைத்து பீன்ஸ் வகைகளிலும் பாலிஃபீனால்கள் என்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் நிறைய உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோயின் ஆபத்தை குறைக்க கூடியவை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், ராஜ்மா உள்ளிட்ட அனைத்து பீன்ஸ் வகைகளையும் உண்பது புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மலச்சிக்கலை தடுக்கும்

ராஜ்மாவில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கலை தடுப்பதில் நார்ச்சத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ராஜ்மாவில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வைத்திருப்பதால் எடையைக் குறைக்க உதவும்.


நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்

துத்தநாகம், நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு இன்றியமையாத கனிமமாகும். ராஜ்மாவில் குறிப்பிடத்தக்க அளவு துத்தநாகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். 3.5 அவுன்ஸ் (100 கிராம்) ராஜ்மாவில் 1.07 மி.கி துத்தநாகம் உள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி தேவையான மதிப்பில் 10% ஆகும்.

பச்சை ராஜ்மா விஷத்தன்மைக் கொண்டது

பச்சை ராஜ்மாவில் ஹேமக்ளூட்டினின் (haemagglutinin) என்ற நச்சுப் பொருள் உள்ளது. இது உயிரைக்கொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்..

அதனால், சிறுநீரக பீன்ஸில் உள்ள நச்சுத்தன்மையை முழுவதுமாக அகற்ற 5 மணி நேரம் ஊறவைத்து 10 நிமிடங்களுக்கு 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் கொதிக்க வைக்க வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) பரிந்துரைக்கிறது. அவ்வாறு செய்யும்போது அதில் இருக்கும் நச்சு நீக்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai automation digital future