Radish in Tamil-முள்ளங்கியில் இவ்ளோ சங்கதி உண்டா..?

radish in tamil-முள்ளங்கியின் பயன்கள்.(கோப்பு படம்)
Radish in Tamil
முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், சோடியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் பி-வைட்டமின்கள் (தியாமின், நியாசின், ரைபோஃப்ளேவின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 6), வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
Radish in Tamil
வைட்டமின் கே முள்ளங்கிகள் பெரும்பாலும் தண்ணீரினால் ஆனவை, எனவே அவை உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த வழியாகும். ஒவ்வொரு 100 கிராம் முள்ளங்கியும் 95.27 கிராம் தண்ணீரைக் கொண்டுள்ளது. இது இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களையும் வழங்குகிறது.
முள்ளங்கியில் அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
Radish in Tamil
முள்ளங்கியில் குறைந்த மாவுச்சத்து
முள்ளங்கி குறைந்த கார்போஹைட்ரேட், மாவுச்சத்து இல்லாத, காய்கறிகளில் ஒன்றாகும். ஒரு கப் வெட்டப்பட்ட முள்ளங்கிகள் சுமார் 3.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை வழங்கும், அவற்றில் பெரும்பாலானவை நார்ச்சத்து ஆகும்.mullangi in tamil,mullangi benefits in tamil,mullangi uses in tamil,Radish in Tamil.
முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாது உப்புக்களையும் அளிக்கின்றன.
Radish in Tamil
முள்ளங்கி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.
முள்ளங்கியில் இரண்டு வகைகள் உள்ளன.
1. வெள்ளை முள்ளங்கி
2.சிவப்பு முள்ளங்கி
இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, இரண்டாவதாக உள்ள சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் உள்ளன.முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
Radish in Tamil
வெள்ளை முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.
சிறிய குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் (அ) சர்க்கரை கலந்து குடித்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
Radish in Tamil
சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ளவர்களுக்கும், சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களுக்கும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் கொடுக்கலாம்.
முள்ளங்கிக் கீரையை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.
முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
முள்ளங்கிக் கீரை , விதை என முழுவதும் மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடலில் தலை முதல் பாதம் வரை சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
Radish in Tamil
இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும். இதை சமைத்து சாப்பிட்டால் அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும். முள்ளங்கி சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும்.
இலைச்சாற்றை 5 மி.லி. என நாள்தோறும் 3 வேளை குடித்து வந்தால் மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.
இந்த முள்ளங்கியை சாப்பிட்டு வந்தால் வாத நோய், வயிற்றெரிச்சல், நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும்.
Radish in Tamil
சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கோர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.
முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது. முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக ஆய்வுகளிலும் தெரிய வந்துள்ளது.
Radish in Tamil
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஐடியா ஐயாசாமி
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து குடிப்பது என்பது முடியாத காரியம். எண்ணெயில் அதன் சுவையும் மனமும் குடிக்க மனம் வராது. ஆனால் சத்துள்ள ஒன்றாக விளங்குவதால் முள்ளங்கி ஜூஸை, கேரட் அல்லது ஆப்பிள் ஜூஸ் உடன் கலந்து குடிக்கலாம்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu